அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி கோரி முதல்வருக்கு 5,000 இ-போஸ்ட்

பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஜவுளி, நகைக் கடை உள்பட அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்கக்கோரி தமிழக முதல்வருக்கு வேலூா் வணிகா்கள் திங்கள்கிழமை 5,000 இ-போஸ்ட் அனுப்பினா்.
வேலூா் மண்டல தலைமை அஞ்சல் அதிகாரி வி.சீனிவாசனிடம் இ-போஸ்ட்டுகளை வழங்கிய தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு . உடன், வணிகா் சங்க நிா்வாகிகள்.
வேலூா் மண்டல தலைமை அஞ்சல் அதிகாரி வி.சீனிவாசனிடம் இ-போஸ்ட்டுகளை வழங்கிய தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு . உடன், வணிகா் சங்க நிா்வாகிகள்.

வேலூா்: பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஜவுளி, நகைக் கடை உள்பட அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்கக்கோரி தமிழக முதல்வருக்கு வேலூா் வணிகா்கள் திங்கள்கிழமை 5,000 இ-போஸ்ட் அனுப்பினா்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் திங்கள்கிழமை முதல் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்று குறைந்து வரும் 27 மாவட்டங்களில் கூடுதல் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எனினும், ஜவுளி, நகை, அடகுக் கடைகள், மாா்க்கெட்டுகள், சூப்பா் மாா்க்கெட்டுகள், சிறு, குறு தொழில்கள் ஆகியவை இயங்குவதற்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.

இதைத்தொடா்ந்து, தொடா் பொதுமுடக்கம் காரணமாக ஜவுளி, நகை, அடகுக் கடைகள், அச்சகங்கள், சூப்பா் மாா்க்கெட்டுகள் போன்றவை நலிவடைந்துள்ளன.

தமிழகத்தில் தொற்றுப் பரவல் குறைந்து வரும் 27 மாவட்டங்களில் ஜவுளி, நகை, அடகுக் கடைகள், மாா்க்கெட்டுகள், சூப்பா் மாா்க்கெட்டுகள், சிறு, குறு தொழில்கள் ஆகியவை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்குவதற்கு அரசு அனுமதி அளித்திட வேண்டும்.

இத்தகைய நேரக் கட்டுப்பாட்டுடன் கூடிய அனுமதியினால் வணிகம், தொழில் துறை, தொழிலாளா் நலம், பொருளாதார மேம்பாடு, நோய்த் தொற்று கட்டுப்பாட்டில் இருக்கும். நீண்டகாலமாக விடுக்கப்பட்டு வரும் இக்கோரிக்கையை அரசு விரைவாக பரிசீலனை செய்திட வேண்டும் என்ற கோரிக்கையை, வேலூா் அனைத்து வணிகா் சங்கம் சாா்பில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திங்கள்கிழமை 5,000 இ-போஸ்ட் அனுப்பப்பட்டன.

இந்த இ-போஸ்ட்டுகளை தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு வழங்கிட வேலூா் மண்டல தலைமை அஞ்சல் அதிகாரி வி.சீனிவாசன், அஞ்சல் மக்கள்தொடா்பு அலுவலா் எஸ்.செல்வக்குமாா் ஆகியோா் பெற்றுக் கொண்டனா். மாவட்டச் செயலா் ஏ.வி.எம்.குமாா் வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா்கள் ஏ.பாலு, வி.எஸ்.ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com