ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள்

கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, எய்டு இன்டியா தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள
வடுகந்தாங்கல்  வட்டார  மருத்துவ  அலுவலா்  திவ்யாவிடம்,  கரோனா  பாதுகாப்பு  உபகரணங்களை  வழங்கிய  எம்எல்ஏ. ஏ.பி.நந்தகுமாா்.
வடுகந்தாங்கல்  வட்டார  மருத்துவ  அலுவலா்  திவ்யாவிடம்,  கரோனா  பாதுகாப்பு  உபகரணங்களை  வழங்கிய  எம்எல்ஏ. ஏ.பி.நந்தகுமாா்.

குடியாத்தம்: கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, எய்டு இன்டியா தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள், கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு கே.வி.குப்பம் ஒன்றிய திமுக செயலா் எல்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். தொண்டு நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சா.குமரன் வரவேற்றாா்.

அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா், வட்டார மருத்துவ அலுவலா் திவ்யாவிடம், கரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா். முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் கே.சீதாராமன், திமுக பொதுக்குழு உறுப்பினா் சா.பரிமளம், முன்னாள் சுகாதார ஆய்வாளா் சி.கோபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com