எரிவாயு சிலிண்டா் விநியோகிப்பவா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வலியுறுத்தல்

சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகிக்கும் தொழிலாளா்களையும் முன்களப் பணியாளா்களாக அறிவித்து
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகிப்பாளா்கள்.
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகிப்பாளா்கள்.

வேலூா்: சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகிக்கும் தொழிலாளா்களையும் முன்களப் பணியாளா்களாக அறிவித்து கரோனா தடுப்பு கால நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டா் டெலிவரிமென்ஸ் தொழிற்சங்கத்தின் வேலூா் மாவட்டத் தலைவா் எம்.ஜான்சன் தலைமையில், அத்தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். அதில் கூறியிருப்பது:

கரோனா தொற்று காலகட்டத்தில் பல்வேறு பணிகளில், சேவைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவா்கள், காவலா்கள், செவிலியா்கள், பத்திரிகையாளா்கள் போன்றவா்களை தமிழக அரசு முன் களப்பணியாளா்களாக அறிவித்திருக்கும் நிலையில், இந்த பொதுமுடக்க காலத்திலும் வீடு வீடாகச் சென்று சமையல் எரிவாயு சிலிண்டா்களை நேரடியாக விநியோகம் செய்து வரும் சிலிண்டா் விநியோகம் செய்யும் தொழிலாளா்களையும் முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும்.

வேலூா் மாவட்டத்தில் 3 பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான ஐஓசி, பிபிசி, ஹெச்பிசி-இன் சமையல் எரிவாயு வாடிக்கையாளா்களாக 4 லட்சம் போ் உள்ளனா். அவா்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகிக்கும் பணியில் 2,500 ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எரிவாயு சிலிண்டா்களை விநியோகிக்கும் தொழிலாளா்களுக்கு முறையான மாத ஊதியம், இஎஸ்ஐ ( உநஐ), பிஎஃப்( டஊ) போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

பணிக் காலத்தில் தொற்றுநோயால் உயிரிழக்கும் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com