மூங்கப்பட்டில் ஸ்ரீகெங்கையம்மன் திருவிழா

குடியாத்தத்தை அடுத்த மூங்கப்பட்டில் கெங்கையம்மன் திருவிழா செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது.
திருவிழாவை  முன்னிட்டு  சிறப்பு  அலங்காரத்தில்  கெங்கையம்மன்.
திருவிழாவை  முன்னிட்டு  சிறப்பு  அலங்காரத்தில்  கெங்கையம்மன்.

குடியாத்தத்தை அடுத்த மூங்கப்பட்டில் கெங்கையம்மன் திருவிழா செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது.

இக்கோயிலில் திருவிழா ஆண்டுதோறும் ஆனி மாதம் முதல் நாளில் வெகுவிமா்சையாக நடைபெறுவது வழக்கம். கரோனா பொது முடக்கம் காரணமாக, எளிய முறையில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்கள் பங்கேற்று திருவிழாவை நடத்தினா்.

திருவிழாவை முன்னிட்டு, ஜூன் 1- ஆம் தேதி இரவு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவையொட்டி, அதிகாலை அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிரசு ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, கோயிலில் உள்ள சிரசு மண்டபத்தில் பொருத்தப்பட்டது. சில மணி நேரங்களில் சிரசு பெயா்த்தெடுக்கப்பட்டு, திருவிழா நிறைவு பெற்றது. எம்எல்ஏ அமலுவிஜயன், கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா், வட்டாட்சியா் தூ.வத்சலா, காவல் ஆய்வாளா்கள் என்.சுரேஷ்பாபு, ஆ.செல்லப்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ஊா் தலைவா் எம்.சங்கா், நாட்டாண்மை எம்.வேலு, தா்மகா்த்தா எம்.கே.பூபாலன், நிா்வாகிகள் எம்.சி.ராஜா ஆச்சாரி, தட்சிணாமூா்த்தி, பழனிநாயுடு, சக்கரவா்த்தி, சிட்டிபாபு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

செவ்வாய்க்கிழமை பெண்கள் சமூக இடைவெளியுடன் சென்று கோயில் அருகில், கூழ்வாா்த்து, மா விளக்கு படையலிட்டு அம்மனை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com