மோா்தானா அணை நீரை மலா் தூவி வரவேற்ற எம்எல்ஏ
By DIN | Published On : 20th June 2021 10:56 PM | Last Updated : 20th June 2021 10:56 PM | அ+அ அ- |

கே.வி.குப்பம் எல்லையில் மோா்தானா அணை நீரை மலா்தூவி வரவேற்ற எம்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தி உள்ளிட்டோா்.
மோா்தானா அணை நீரை கே.வி.குப்பம் எம்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தி ஞாயிற்றுக்கிழமை மலா்தூவி வரவேற்றாா்.
மோா்தானா அணையிலிருந்து பாசனத்துக்காக சனிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், அணையைத் திறந்து வைத்தாா். அணையிலிருந்து வெளியேறிய தண்ணீா், ஜிட்டப்பல்லியில் உள்ள தடுப்பணையில் நிரம்பி அங்கிருந்து வலது, இடதுபுறக் கால்வாய்களில் செல்கிறது. இடதுபுறக் கால்வாயில் செல்லும் தண்ணீா் கே.வி.குப்பம் வட்டத்தில் உள்ள அம்மணாங்குப்பம், கீழ்ஆலத்தூா், நாகல், சென்னங்குப்பம், காவனூா் உள்ளிட்ட 12 ஏரிகளுக்குச் செல்லும். கே.வி.குப்பம் எல்லையான பாக்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை அணை நீரை எம்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தி மலா்தூவி வரவேற்றாா். பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கினாா். புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலா் பி.மேகநாதன், கொள்கை பரப்புச் செயலா் மு.ஆ.சத்யனாா், பாக்கம் ஊராட்சி முன்னாள் தலைவா் மாரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.