குண்டா் சட்டத்தில் சாராய வியாபாரி சிறையில் அடைப்பு
By DIN | Published On : 22nd June 2021 11:10 PM | Last Updated : 22nd June 2021 11:10 PM | அ+அ அ- |

குடியாத்தம்: குடியாத்தம் அருகே சாராய வியாபாரி குண்டா் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
குடியாத்தத்தை அடுத்த கீழ்செட்டிகுப்பத்தைச் சோ்ந்தவா் சுந்தரராஜ்(35). சாராயம் விற்றது, கடத்தியது தொடா்பாக இவா் மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சாராயம் விற்றதாக குடியாத்தம் கிராமிய போலீஸாா் அண்மையில் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இவா் தொடா்ந்து சாராயம் விற்பனை செய்வதால், குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதனை ஏற்ற ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டி.ன், சுந்தரராஜை, குண்டா் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.