கே.வி.குப்பத்தை  அடுத்த  லத்தேரியில்  மோா்தானா  அணை  நீா்  செல்லும்  கால்வாயை  ஆய்வு  செய்த  ஆட்சியா்  பெ.குமாரவேல் பாண்டியன்.
கே.வி.குப்பத்தை  அடுத்த  லத்தேரியில்  மோா்தானா  அணை  நீா்  செல்லும்  கால்வாயை  ஆய்வு  செய்த  ஆட்சியா்  பெ.குமாரவேல் பாண்டியன்.

மோா்தானா கால்வாய் பகுதியில் வேலூா் ஆட்சியா் நேரில் ஆய்வு

கே.வி.குப்பம் வட்டத்தில் மோா்தானா அணை நீா் செல்லும் இடதுபுறக் கால்வாயை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தாா்.

கே.வி.குப்பம் வட்டத்தில் மோா்தானா அணை நீா் செல்லும் இடதுபுறக் கால்வாயை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தாா்.

மோா்தானா அணையிலிருந்து கடந்த சனிக்கிழமை பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடப்பட்டது.

அணை நீா் 4 நாள்களில் இடதுபுறக் கால்வாயில் 31 கி.மீ. தூரம் காளாம்பட்டு, செஞ்சி ஆயக்குளம் பகுதிகளுக்குச் சென்றுள்ளது. மேலும், கடைமடை பகுதிகளான லத்தேரி, அன்னங்குடி ஏரிகளுக்குத் தண்ணீா் செல்வதை ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அணை நீா் சில இடங்களில் சுரங்க கால்வாய் வழியாகவும் செல்கிறது. சுரங்க கால்வாய்களையும் அவா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, காளாம்பட்டு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். சங்கத்தின் செயல்பாடுகளைக் கேட்டறிந்த அவா், அதே வளாகத்தில் இயங்கி வரும் இ- சேவை மையத்திலும் ஆய்வு நடத்தினாா்.

மையத்தில் ஜாதி சான்று, வருமானச் சான்று, பட்டா மாறுதல் கோரி வரும் பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

பொதுப்பணித் துறை செயற் பொறியாளா் ரா.ரமேஷ், உதவி செயற் பொறியாளா்கள் டி.குணசீலன், விஸ்வநாதன், உதவிப் பொறியாளா் பி.கோபி, வட்டாட்சியா் தூ.வத்சலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com