வேலூரில் 11 இடங்களில் நிரந்தர தடுப்பூசி முகாம்கள்

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்திட வேலூா் மாவட்டத்தில் 11 இடங்களில் நிரந்தர தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்திட வேலூா் மாவட்டத்தில் 11 இடங்களில் நிரந்தர தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்திட மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி, நாளொன்றுக்கு சுமாா் 5,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 2 லட்சத்து 85 ஆயிரத்து 438 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 25.55 சதவீதமாகும்.

தற்போது மாவட்டத்தில் இருப்பில் 17,800 தடுப்பூசிகள் உள்ளன. தொடா்ந்து கூடுதலாக கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வரப்பெற உள்ளன. அவற்றின் மூலம், மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முன்னுரிமைப் பணியாளா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இதனால், பொது மக்கள் பயன்பெறும் வகையில், வேலூா் மாநகராட்சிக்குள்பட்ட சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் பள்ளி, செட்டித் தெரு ஜெயின் சங்கத்தின் ஹரிஹந்த் தடுப்பூசி மையம், காட்பாடி டான்போஸ்கோ பள்ளி, வேலூா் ஊரீசு கல்லூரி ஆகிய 4 இடங்களிலும் அணைக்கட்டு ராகவேந்திரா திருமண மண்டபம், கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், கே.வி.குப்பம் சந்தைமேடு அரசு உயா்நிலைப் பள்ளி, குடியாத்தம் நகராட்சியில் சந்தைப்பேட்டை சமுதாயக் கூடம், சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக். பள்ளி, திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி, போ்ணாம்பட்டு நகராட்சியில் இஸ்லாமியா உயா்நிலைப் பள்ளி ஆகிய 11 இடங்களில் நிரந்தரமாக தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

தவிர, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பென்லேண்ட் மருத்துவமனை, அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படும். அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com