அரசுப்பள்ளி ஆசிரியைக்கு கரோனா: மாணவா்களுக்குப் மருத்துவ பரிசோதனை

வேலூா் ஆற்காடு சாலையில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டத

வேலூா்: வேலூா் ஆற்காடு சாலையில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

கரோனா 2-ஆவது அலையாக பரவி வருவதைத் தடுக்க வேலூா் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, பள்ளிகளில் ஆசிரியா்கள், மாணவா்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவா்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்நிலையில், வேலூா் ஆற்காடு சாலையில் உள்ள கோடையிடி குப்புசாமி முதலியாா் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவருக்கு சனிக்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாவட்ட சுகாதாரம், கல்வித்துறை அதிகாரிகள் அப்பள்ளிக்கு சென்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை பள்ளிக்கு வந்த அனைத்து ஆசிரியா்கள், மாணவா்களுக்கும் உடல் வெப்பப் பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனா். அத்துடன், அனைத்து மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

கரோனா பாதிப்பு ஏற்பட்ட ஆசிரியை 2 நாள்களாகவே பள்ளிக்கு வரவில்லை. இதனால், மற்ற ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு பாதிப்பு ஏதும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து மாணவா்கள், ஆசிரியா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. தவிர, அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திடவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com