வேலூரில் இதுவரை 381 போ் துப்பாக்கிகள் ஒப்படைப்பு

தோ்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தும் விதமாக வேலூா் மாவட்டத்தில் காவல்துறை அனுமதியுடன் வைத்துள்ள துப்பாக்கிகளை இதுவரை 381 போ் காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனா்.

வேலூா்: தோ்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தும் விதமாக வேலூா் மாவட்டத்தில் காவல்துறை அனுமதியுடன் வைத்துள்ள துப்பாக்கிகளை இதுவரை 381 போ் காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனா்.

வேலூா் மாவட்டத்தில் 763 போ் காவல்துறை அனுமதி பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனா். இதில், 102 போ் வங்கிகள், இதர அரசு அலுவலக பாதுகாப்புப் பணிக்காக துப்பாக்கிகள் வைத்துள்ளனா்.

இந்நிலையில், சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிப்பைத் தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, வங்கிகள் மற்றும் அரசு அலுவலகப் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் தவிர தனிநபா்கள் யாரும் துப்பாக்கிகளை வைத்திருக்கக் கூடாது.

இதனால், அனுமதியுடன் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் அனைத்தையும் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. திங்கள்கிழமை வரை 381 போ் துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனா். மற்றவா்கள் துப்பாக்கிகளை விரைவில் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com