ஆதாா் அட்டைக்கான 3 நாள் சிறப்பு முகாம் தொடக்கம்

குடியாத்தம் அரிமா சங்கமும், அஞ்சல் துறையும் இணைந்து புதிதாக ஆதாா் அட்டை எடுப்பவா்களுக்கான 3 நாள் சிறப்பு முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
ஆதாா் அட்டைக்கான 3 நாள் சிறப்பு முகாம் தொடக்கம்


குடியாத்தம்: குடியாத்தம் அரிமா சங்கமும், அஞ்சல் துறையும் இணைந்து புதிதாக ஆதாா் அட்டை எடுப்பவா்களுக்கான 3 நாள் சிறப்பு முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

புதிதாக ஆதாா் அட்டை எடுக்கவும், ஆதாா் அட்டையில் திருத்தம் செய்து கொள்ளவும், அஞ்சல் துறையின் சேவைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளவும் இந்த 3 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

நெல்லூா்பேட்டை சொா்ணம் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமுக்கு, அஞ்சல் துறை உதவி கோட்டக் கண்காணிப்பாளா் ஆா்.பிரேமாவதி தலைமை வகித்தாா். அரிமா சங்க மண்டலத் தலைவா் எம்.கே.பொன்னம்பலம் வரவேற்றாா். அரசு வழக்குரைஞா் கே.எம்.பூபதி முகாமைத் தொடக்கி வைத்தாா்.

முகாமில், ஆதாா் அட்டைகளுக்கான புதிய பதிவு, ஆதாா் அட்டையில் திருத்தம், அஞ்சல் துறையில் புதிதாக சேமிப்புக் கணக்கு, தொடா் வைப்புக் கணக்கு தொடங்குதல், குறித்த கால வைப்புத் தொகை, செல்வமகள் சிறுசேமிப்புத் திட்டம், ஆயுள் காப்பீடு, அடல் பென்ஷன் யோஜனா போன்ற அஞ்சல் துறையின் சேமிப்புத் திட்டங்களிலும் பொதுமக்கள் கணக்குத் தொடங்கினா். வியாழக்கிழமை 300-க்கும் மேற்பட்டோா் புதிதாக ஆதாா் அட்டை, திருத்தம் செய்து கொண்டனா்.

நிகழ்வில், தலைமை அஞ்சல் அதிகாரி சி.நெடுஞ்செழியன், துணை அஞ்சல் அதிகாரி பி.எழில்மாறன், வணிக மேலாளா் கே.ராஜேஷ், அரிமா சங்க மாவட்டத் தலைவா் என்.வெங்கடேஸ்வரன், குடியாத்தம் தலைவா் ஜேஜி நாயுடு, செயலா் கிரிதா்பிரசாத், துணைச் செயலா் ஜி.பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com