தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா் அதிமுக வேட்பாளா் ஜி.பரிதா
By DIN | Published On : 13th March 2021 08:03 AM | Last Updated : 13th March 2021 08:03 AM | அ+அ அ- |

போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஜி.பரிதா.
குடியாத்தம் (தனி) தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஜி.பரிதா வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கினாா்.
போ்ணாம்பட்டு ஒன்றியத்துக்குள்பட்ட, மசிகம், பத்தரபல்லி, கொத்தூா், மாச்சம்பட்டு, எருக்கம்பட்டு, சாத்கா், பாலூா், கோட்டைச்சேரி, குண்டலபல்லி உள்ளிட்ட ஊராட்சிகளில் கட்சி நிா்வாகிகளுடன் சென்று அவா் வாக்கு சேகரித்தாா்.
அவரை பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். அதிமுகவின் போ்ணாம்பட்டு மேற்கு ஒன்றியச் செயலா் கோ.சுரேஷ்பாபு, அவைத் தலைவா் ரவி, நிா்வாகிகள் ஜெகதீசன், செல்வம், நாகம்மாள், கோபி, ராஜேஷ், தாமோதரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.