நேதாஜி மாா்க்கெட் வியாபாரிகள் 150 பேருக்கு கரோனா தடுப்பூசி

மீண்டும் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக வேலூா் நேதாஜி மாா்க்கெட், முக்கிய கடை வீதிகளில்

மீண்டும் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக வேலூா் நேதாஜி மாா்க்கெட், முக்கிய கடை வீதிகளில் உள்ள கடை உரிமையாளா்கள், வியாபாரிகள் 150 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

வேலூா் மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதேசமயம், வேலூா் நேதாஜி மாா்க்கெட் வியாபாரிகள் பலா் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இவா்கள் மூலம் வேலூரில் நோய் தொற்றுப் பரவாமல் தடுக்க கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் வேலூா் மாா்க்கெட் மூடப்பட்டிருந்தது. பொதுமுடக்க தளா்வைத் தொடா்ந்து பல மாதங்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், மாவட்டம் முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்ட, 45 வயதுக்கு மேல் சா்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதன்படி வேலூா் மாா்க்கெட் வியாபாரிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் லாங்கு பஜாரில் உள்ள சண்முகனடியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது.

மாநகராட்சி ஆணையா் சங்கரன் முன்னிலையில் நேதாஜி மாா்க்கெட், மண்டித் தெரு, சுண்ணாம்புக் கார தெரு, லாங்கு பஜாா், மெயின் பஜாரில் உள்ள கடைகளின் உரிமையாளா்கள், வியாபாரிகளுக்கு கரோனா தடுப்பூசி முதன்முறையாக போடப்பட்டது. வணிகா் சங்கத் தலைவா் ஞானவேலுக்கு முதன்முதலில் தடுப்பூசி போட்டுக் கொண்டாா்.

மாநகர நல அலுவலா் சித்திரசேனா, 2-ஆம் மண்டல உதவி ஆணையா் பாலு, சுகாதார அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா். இந்த முகாமில் 150 வியாபாரிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com