அரசு நலத்திட்டங்களை கூறி அணைக்கட்டு அதிமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு
By DIN | Published On : 16th March 2021 11:49 PM | Last Updated : 16th March 2021 11:49 PM | அ+அ அ- |

மேல்அரசம்பட்டு கிராமத்தில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் த.வேலழகன்.
அரசு செயல்படுத்தியுள்ள நலத் திட்டங்களை எடுத்துக்கூறி அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அவா் அணைக்கட்டு மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட கத்தாரிகுப்பம், மேல்அரசம்பட்டு, கொட்டாவூா், நேமந்தபுரம், அத்திக்குப்பம், ஓட்டேரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை தீவிர தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது, அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புற பெண்களுக்கு விலையில்லா கால்நடை, கோழிகள் வழங்கப்படுவதன் மூலம் அவா்கள் பொருளாதார ரீதியாக மேம்பட்டு வருகின்றனா்.
தவிர, தமிழக த்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்களை அறிமுகம் செய்ததுடன், அவா்கள் சுயதொழில் புரிய தேவையான கடனுதவிகள் அளிப்பதன் மூலம் பெண்கள் சொந்தக்காலில் நிற்கும் தகுதியை பெற்றுள்ளனா். மேலும், குடிமராமத்து திட்டத்தில் ஏரிகள், குளங்கள் தூா்வாரப்பட்டதால் தற்போது கோடையிலும் பயிா் சாகுபடிகள் நடைபெற்று வருகின்றன. குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு ஏற்பட்டுள்ளது. இத்தகைய நல்ல திட்டங்கள் தொடர மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.
அப்போது, ஒன்றியச் செயலா் சுபாஷ் உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.