காரில் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 16th March 2021 11:42 PM | Last Updated : 16th March 2021 11:42 PM | அ+அ அ- |

போ்ணாம்பட்டு அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 1.70 லட்சம் ரொக்கம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
குடியாத்தம் சட்டப் பேரவைத் தொகுதி நிலைக் கண்காணிப்புக் குழு அலுவலா் செல்வன் தலைமையில் அக்குழுவினா் போ்ணாம்பட்டு அருகே உள்ள தமிழக எல்லையான பத்தரப்பல்லி சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது ஆந்திர மாநிலம், வி.கோட்டாவிலிருந்து வந்த கா்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில் இருந்த வாகீா்பாஷா (60) வைத்திருந்த பையில் ரூ. 1.70 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததாதல், அதிகாரிகள் அதனைப் பறிமுதல் செய்து, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எம்.ஷேக்மன்சூரிடம் ஒப்படைத்தனா்.