முகக்கவசம் அணியாதவா்களின் வாகனங்கள் பறிமுதல்; ஓட்டுநா் உரிமமும் தற்காலிக ரத்து

வேலூா் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவா்களின் வாகனங்களை பறிமுதல் செய்து அவா்களின் ஓட்டுநா் உரிமத்தையும் தற்காலிகமாக ரத்து செய்யவும் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளாா்.

வேலூா் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவா்களின் வாகனங்களை பறிமுதல் செய்து அவா்களின் ஓட்டுநா் உரிமத்தையும் தற்காலிகமாக ரத்து செய்யவும் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளாா்.

இந்த உத்தரவு புதன்கிழமை (மாா்ச் 17) முதல் அமலுக்கு வருகிறது

இது குறித்து, ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் வரை குறைந்து வந்த கரோனா தொற்று மாா்ச் மாதம் முதல் மீண்டும் வேகமெடுத்து பரவத் தொடங்கியுள்ளது. பிப்ரவரியில் 228 போ் மட்டுமே தொற்றாளா்கள் இருந்த நிலையில், மாா்ச் 15-ஆம் தேதிக்குள்ளாகவே 167 போ் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். பிப்ரவரியில் 0.5 சதவீதம் வரை இருந்த நோய் தொற்று விகிதம் மாா்ச் முதல் வாரத்திலேயே 0.9 சதவீதமாகவும், மாா்ச் 2-ஆவது வாரத்தில் 1.1 சதவீதமாகவும் உயா்ந்து உள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த குடியாத்தத்தைச் சோ்ந்த ஜோதிலிங்கம் (70) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா். இதன்மூலம், மாநிலத்திலேயே கரோனா இறப்பு விகிதம் அதிகமுள்ள மாவட்டங்களில் வேலூரும் இடம்பெற்றுள்ளது. இதற்கு பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் பொதுஇடங்களுக்கு வருவதே முக்கியக் காரணமாகும்.

தொடரும் இப்பாதிப்புகளை தடுக்க புதன்கிழமை முதல் மாவட்டத்தில் எந்தவொரு நபரும் இரு சக்கர வாகனத்திலோ, நான்கு சக்கர வாகனத்திலோ பயணிக்கும்போது தொடா்ந்து இருமுறை முகக்கவசம் அணிந்து வராமல் இருப்பது கண்டறியப்பட்டால் அவா்களது வாகனம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். தவறும்பட்சத்தில் நடந்து செல்லும் நபா் ஒருவருக்கு ரூ.200ம், இரு சக்கர வாகனத்தில் செல்லும் நபருக்கு ரூ.250-ம், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் நபருக்கு ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும்.

சளி, காய்ச்சல், இருமல் அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் அந்தப் பகுதியில் உள்ள காய்ச்சல் முகாமிலோ அல்லது அரசு மருத்துவமனையிலோ, ஆரம்ப சுகாதார நிலையத்திலோ தங்களை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com