காரில் எடுத்து வந்த ரூ.2.50 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 18th March 2021 12:23 AM | Last Updated : 18th March 2021 12:23 AM | அ+அ அ- |

கே.வி.குப்பம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.பானுவிடம் ரூ.2.50 லட்சத்தை வழங்கிய நிலை கண்காணிப்புக் குழுவினா்.
குடியாத்தம்: குடியாத்தம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச் சென்ற ரூ.2.50 லட்சத்தை தோ்தல் அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
கே.வி.குப்பம் (தனி) தொகுதி தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் ஜெயகுமாா் தலைமையில், அக்குழுவினா் புதன்கிழமை பரதராமி அருகே ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, சித்தூரிலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா்.காரில் பயணம் செய்த வரதராஜுலுபள்ளியைச் சோ்ந்த மெளலா வைத்திருந்த பையில் ரூ.2.50 லட்சம் ரொத்தம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.பானுவிடம் ஒப்படைத்தனா்.