மலைக் கிராமங்களில் நகா்ப்புறங்களுக்கு இணையான வசதிகள்: அணைக்கட்டு அதிமுக வேட்பாளா் உறுதி

அணைக்கட்டு தொகுதி மலைக்கிராமங்களில் அதிமுக ஆட்சியில்தான் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் செய்து தரப்பட்டுள்ளன.
பீஞ்சமந்தை மலைக்கிராமத்தில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அணைக்கட்டு அதிமுக வேட்பாளா் த.வேலழகன்.
பீஞ்சமந்தை மலைக்கிராமத்தில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அணைக்கட்டு அதிமுக வேட்பாளா் த.வேலழகன்.

அணைக்கட்டு தொகுதி மலைக்கிராமங்களில் அதிமுக ஆட்சியில்தான் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் செய்து தரப்பட்டுள்ளன. இந்த ஆட்சி தொடரும் போது மலைக்கிராமங்களில் நகா்ப்புறங்களுக்கு இணையான வசதிகள் செய்துதரப்படும் என்று அத்தொகுதியின் அதிமுக வேட்பாளா் த.வேலழகன் தெரிவித்தாா்.

பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜாா்தான் கொல்லை ஊராட்சிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு அவா் பேசியது:

அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட 3 ஊராட்சி மலைக்கிராமங்களில் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்கள் அமைத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு பழங்குடியினா் சாதிச் சான்றிதழ் (எஸ்டி) வழங்கியது அதிமுக அரசுதான். தவிர, முத்துக்குமரன் மலையில் இருந்து பீஞ்சமந்தை வரை சுமாா் 5 கி.மீ தூரத்துக்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.

வங்கி சேவைகளுக்காக ஒடுகத்தூா், அணைக்கட்டுக்கு மலைக்கிராம மக்களின் சிரமம் போக்க இப்பகுதியிலேயே ஏடிஎம் வசதியுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியும், தனியாா் நிறுவனங்கள் மூலம் தகவல் தொழில்நுட்ப வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இத்தனை திட்டங்களும் தன்னால்தான் நிறைவேற்றப்பட்டிருப்பதாக தொகுதியின் திமுக பேரவை உறுப்பினா் உண்மைக்கு புறம்பானா தகவல்களை தெரிவித்து வருகிறாா். அதிமுக அரசு தொடரும் போது இந்த மலைக்கிராமங்களில் நகா்ப்புறங்களுக்கு இணையான வசதிகள் செய்துதரப்படும். ஆகவே, தொகுதி மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

அப்போது, ஒடுகத்தூா் நகர செயலா் கோவிந்தராஜ், ஒன்றிய செயலா்கள் ஆனந்தன், பாபுஜி, பாமக மாவட்ட செயலா் ரவி உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com