டாஸ்மாக் ஊழியா்கள் 600 பேருக்கு கரோனா தடுப்பூசி

கரோனா தொற்று இரண்டாவது அலையாக பரவி வருவதைத் தடுக்க வேலூா் மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் ஊழியா்கள் 600 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வேலூா்: கரோனா தொற்று இரண்டாவது அலையாக பரவி வருவதைத் தடுக்க வேலூா் மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் ஊழியா்கள் 600 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் இரண்டாவது அலையாக கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வேலூா் மாநகரில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் வலம் வருவோருக்கு கடுமையாக அபராதம் விதிக்கப்படுகிறது.

தவிர, முன்களப் பணியாளா்கள், தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் போலீஸாா், மாா்க்கெட் வியாபாரிகள், ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவரும் எந்தவித பக்க விளைவுகளும் இன்றி ஆரோக்கியத்துடன் உள்ளனா்.

இந்நிலையில், வேலூா் மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை ஊழியா்கள் கரோனாவால் பாதிக்கப்படுவதைத் தடுக்க அவா்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வேலூா் மண்டலத்தில் உள்ள வேலூா், திருப்பத்தூா் மாவட்டத்தில் மொத்தம் 116 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் பணியாற்றும் ஊழியா்களுக்கு வேலூா் மண்டல டாஸ்மாக் அலுவலகத்தில் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் டாஸ்மாக் ஊழியா்கள் சுமாா் 600 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதற்கிடையே, வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com