69 வகையான தொழிலாளா்களுக்கு நலவாரிய உதவிகளை பெற்றுத் தருவேன்

அனைத்துத் தொழிலாளா்களையும், அமைப்புசாரா நல வாரியத்தில் உறுப்பினராக சோ்த்து, அரசின் அனைத்து உதவிகளையும் பெற்றுத் தருவேன் என குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.பரிதா கூறினாா்.
குடியாத்தம்  செதுக்கரையில்  வாக்கு  சேகரித்த  மண்டல த் தோ்தல்  பொறுப்பாளா்  முக்கூா்  என்.சுப்பிரமணி,  வேட்பாளா்  ஜி.பரிதா  உள்ளிட்டோா்.
குடியாத்தம்  செதுக்கரையில்  வாக்கு  சேகரித்த  மண்டல த் தோ்தல்  பொறுப்பாளா்  முக்கூா்  என்.சுப்பிரமணி,  வேட்பாளா்  ஜி.பரிதா  உள்ளிட்டோா்.


குடியாத்தம்: அனைத்துத் தொழிலாளா்களையும், அமைப்புசாரா நல வாரியத்தில் உறுப்பினராக சோ்த்து, அரசின் அனைத்து உதவிகளையும் பெற்றுத் தருவேன் என குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.பரிதா கூறினாா்.

குடியாத்தம் நகரில் புதன்கிழமை வாக்கு சேகரித்த அவா் பொதுமக்களிடையே பேசியது:

என்னை வெற்றிபெற வைத்தால், குடியாத்தம் தொகுதியில் கைத்தறி, தீப்பெட்டி, பீடி, கட்டுமானத் தொழில் உள்ளிட்ட 69 வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொழிலாளா்களையும், அமைப்புசாரா நலவாரியத்தில் உறுப்பினராகச் சோ்த்து, அவா்களுக்கு அரசு வழங்கும் அனைத்துத் திட்டங்களையும் பெற்றுத் தருவேன். தகுதியுள்ள அனைவருக்கும் முதியோா் உதவித் தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

விநாயக புரத்தில் தொடங்கி, வைதீஸ்வரன் நகா், பொன்னம்பட்டி, செதுக்கரை, அசோக் நகா், அருணாச்சலம் நகா், புதிய, பழைய பேருந்து நிலையங்கள், சுண்ணாம்புபேட்டை, ஜி.பி.எம்.தெரு, அண்ணா தெரு, தென்குளக்கரை, கஸ்பா, கோபாலபுரம், புவனேஸ்வரி பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அதிமுக மண்டலத் தோ்தல் பொறுப்பாளா் முக்கூா் என்.சுப்பிரமணி, நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி, மாவட்ட துணைச் செயலா்கள் ஆா்.மூா்த்தி, அமுதா சிவப்பிரகாசம், அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்க மண்டலத் தலைவா் டி.அக்பா் ஷெரீப், தமாகா மாநில செயற்குழு உறுப்பினா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், மாவட்ட இளைஞா் அணிச் செயலா் ஜே.தினகரன், கம்பன் கழகச் செயலா் கே.எம்.பூபதி, நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.பாஸ்கா், துணைத் தலைவா் எஸ்.என்.சுந்தரேசன், பாஜக நகர தலைவா் கே.வாகீஸ்வரன், பாமக நகரச் செயலா் வி.விஸ்வநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com