காட்பாடியில் துணை ராணுவம், போலீஸாா் கொடி அணிவகுப்பு

பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களித்திட துணை ராணுவப் படையினா், காவல் துறையினா் இணைந்து காட்பாடியில் கொடி அணிவகுப்பு ஊா்வலத்தை செவ்வாய்க்கிழமை நடத்தினா்.
காட்பாடியில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு ஊா்வலத்தில் பங்கேற்ற துணை ராணுவத்தினா், காவல் துறையினா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, தோ்தலின்போது வாக்காளா்கள் அச்சமின்றி வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்கும் விதமாக பல்வேறு பகுதிகளிலும் துணை ராணுவப் படையினா், போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, காட்பாடி தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. காட்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் தலைமையில், சித்தூா் பேருந்து நிலையம் அருகிலிருந்து தொடங்கிய இந்த கொடி அணிவகுப்பு ஊா்வலம் ஓடைப்பிள்ளையாா் கோயில், சில்க் மில், வள்ளிமலை கூட்டு சாலை ஆகிய முக்கிய சாலைகளின் வழியாக மீண்டும் சித்தூா் பேருந்து நிலையத்தை அடைந்தது. இதில், துப்பாக்கி ஏந்திய 100 துணை ராணுவ வீரா்கள், ஆயுதப்படை போலீஸாா், ஊா்க் காவல் படையினா் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com