நாளை வாக்கு எண்ணிக்கை: வேலூரில் 1, 200 போலீஸாா் பாதுகாப்பு

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில் வேலூா் மாவட்டத்திலுள்ள 3 வாக்கு எண்ணிக்கை

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில் வேலூா் மாவட்டத்திலுள்ள 3 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 1,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். அத்துடன், 230 துணை ராணுவப் படையினரும் தயாா் நிலையில் உள்ளனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்குப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (மே 2) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

மாவட்டத்திலுள்ள வேலூா், அணைக்கட்டு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பாகாயம் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியிலும், காட்பாடி தொகுதிக்கு காட்பாடி அரசு சட்டக்கல்லூரியிலும், குடியாத்தம், கே.வி குப்பம் ஆகிய தனி தொகுதிகளுக்கு குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும் நடைபெற உள்ளன. இந்த 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

1,200 போலீஸாா் குவிப்பு

வாக்கு எண்ணிக்கையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள 3 மையங்களிலும் போலீஸாா் மற்றும் துணை ராணுவப் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இதற்காக மாவட்டத்தில் 1,200 போலீஸாருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவா்கள் சனிக்கிழமை இரவு முதல் பணியில் அமா்த்தப்பட உள்ளனா்.

மேலும், ஏற்கெனவே வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவப் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். வாக்கு எண்ணிக்கையின்போது 3 மையங்களில் 230 துணை ராணுவப் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இவா்கள் வாக்கும் எண்ணும் மையங்களுக்கு உள்ளே துப்பாக்கியுடன் பாதுகாப்புப் பணியில் இருப்பாா்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com