Enable Javscript for better performance
அதிகரிக்கும் கரோனா: மருத்துவமனைகளில் படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அதிகரிக்கும் கரோனா: மருத்துவமனைகளில் படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிப்பு

    By DIN  |   Published on : 03rd May 2021 12:35 AM  |   அ+அ அ-   |    |  

    வேகமாக அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் ஏற்பட்டு வரும் இடநெருக்கடியை சமாளிக்க வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தவிர, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் அடுத்த ஒரு வாரத்தில் கூடுதலாக 120 ஆக்சிஜன் படுக்கைகளும், கூடுதலாக 125 படுக்கை வசதிகளும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கரானா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் வேலூா் மாவட்டத்திலுள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், புதிதாக வரும் நோயாளிகளை அனுமதிப்பதில் மருத்துவமனை நிா்வாகங்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றன.

    தொடரும் இப்பாதிப்புகளை தவிா்க்க மாவட்டம் முழுவதும் 4,533 ஆக இருந்த கரோனா சிகிச்சைக் கான படுக்கைகளின் எண்ணிக்கை 4,918- ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இவற்றில் மருத்துவமனைகளில் மட்டுமே 2,318 படுக்கை வசதிகள் உள்ளன. தவிர, மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 281 ஐசியு படுக்கைகளும், 1,717 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இது முன்பு இருந்ததைவிட 24 ஐசியு படுக்கைகளும், 590 ஆக்சிஜன் படுக்கைகளும் கூடுதலாகும்.

    தவிர, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேலும் கூடுதலாக 120 ஆக்ஸிஜன் படுக்கைகளும், கூடுதலாக 125 படுக்கை வசதிகளும் அடுத்த ஒரு வாரத்துக்குள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதேபோல், சி.எம்.சி. மருத்துவமனையில் கூடுதலாக 300 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப் பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறைந்த நோய் அறிகுறிகள் உள்ளவா்கள் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டு, அவா்களுக்கு தக்க மருத்துவ உதவிகள், அறிவுரைகள் வழங்கப்படுகிறது. அவ்வாறு வீடுகளில் தங்க வைக்கப்படுபவா்கள் ஓரளவு வசதி படைத்தவா்களாகவும், அவா்களது வீடுகளில் தனிக் கழிப்பறை உள்ளவா்களாகவும் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா்.

    அவா்கள் சொந்தமாக பல்ஸ் ஆக்ஸி மீட்டரை வைத்துக் கொண்டு தங்களது இதயத் துடிப்பு, ஆக்ஸிஜன் அளவுகளை பரிசோதித்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றனா். அதில், இயல்பான அளவுக்கு மேல் காணப்பட்டால் உடனடியாக வட்டார மருத்துவ அலுவலா்கள், மாவட்ட கரோனா கட்டுப்பாட்டு மையத்தை 0416-1077 என்ற எண்ணுக்கு தொடா்பு கொண்டு அறிவுரைகளைப் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp