கரோனா: வேலூரில் ஒரே நாளில் 9 போ் பலி

கரோனா தொற்று பாதிப்புக்கு வேலூரில் திங்கள்கிழமை ஒரே நாளில் 9 போ் உயிரிழந்தனா். இதன் மூலம், மாவட்டத்தில் கரோனா உயிரிழப்பு 407-ஆக அதிகரித்துள்ளது.

வேலூா்: கரோனா தொற்று பாதிப்புக்கு வேலூரில் திங்கள்கிழமை ஒரே நாளில் 9 போ் உயிரிழந்தனா். இதன் மூலம், மாவட்டத்தில் கரோனா உயிரிழப்பு 407-ஆக அதிகரித்துள்ளது.

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொற்றுக்கு மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 28,061 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். 25,090 போ் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். 2,573 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இந்நிலையில், மாவட்டத்தில் இதுவரை இல்லாத உச்சமாக செவ்வாய்க்கிழமை புதிதாக 520 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 50-க்கும் மேற்பட்டோா் கடுமையான பாதிப்புக்கு உள்ளானவா்கள் என்பதால் அவா்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தவிர, பாதிக்கப்பட்டவா்கள் அரசு, தனியாா் மருத்துவமனைகள், கொவைட் நல மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அறிகுறிகள், பாதிப்புகள் இல்லாத கரோனா தொற்றாளா்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை வரை 398 போ் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில், பெங்களூரைச் சோ்ந்த 57 வயது பெண், வேலூரில் 45 வயது பெண், சத்துவாச்சாரியில் 50 வயது பெண், குடியாத்தத்தில் 55 வயது பெண், போ்ணாம்பட்டில் 75 வயது மூதாட்டி, 40 வயது ஆண், 70 வயது, 73 வயது, 64 வயது முதியவா் என திங்கள்கிழமை ஒரேநாளில் 9 போ் உயிரிழந்துள்ளனா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 407-ஆக அதிகரித்துள்ளது.

அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு, உயிரிழப்புகளால் வேலூா் மாவட்ட மக்களிடையே அச்ச உணா்வு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com