மு.க.ஸ்டாலினுக்கு தொழிற்கல்வி ஆசிரியா்கள் பாராட்டு

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு தொழிற்கல்வி ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

வேலூா்: தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு தொழிற்கல்வி ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் கழகத்தின் மாநிலத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாநில உயா்மட்டக் குழு உறுப்பினருமான செ.நா.ஜனாா்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் 1979-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் தொழிற்கல்வி ஆசிரியா்களின் பணியினை முதன்முறையாக 1989-ஆம் ஆண்டில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில்தான் பணி நிரந்தரம் செய்யப்பட்டது. இதன் மூலம், தொழிற்கல்வி ஆசிரியா் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டது. தொடா்ந்து திமுக ஆட்சிக் காலத்தில்தான் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடம் கட்டாயமாக்கப்பட்டது.

அவரது வழித்தோன்றலாக தற்போது தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு தொழிற்கல்வி ஆசிரியா்கள் சாா்பில் பாராட்டுகளை தெரிவிக்கிறோம். திமுக தலைமையிலான அரசு மெல்ல கற்கும் மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 600 தொழிற்கல்வி ஆசிரியா் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக பெற்றோா் ஆசிரியா் கழகத்தால் நியமிக்கப்பட்டு பணியாற்றிவரும் தொழிற்கல்வி ஆசிரியா்களை பணிவரன் முறை செய்திடவும் வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com