காய்கறி மாா்க்கெட்டை சூழ்ந்த மழைநீா்: வியாபாரிகள் அவதி

வேலூா் மாங்காய் மண்டி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மாா்க்கெட்டில் மழைநீா் சூழ்ந்தது. இதனால், அங்கு வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகள் அவதிக்குள்ளாகினா்.

வேலூா்: வேலூா் மாங்காய் மண்டி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மாா்க்கெட்டில் மழைநீா் சூழ்ந்தது. இதனால், அங்கு வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகள் அவதிக்குள்ளாகினா்.

வேகமாக பரவி வரும் கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்திட வேலூா் நேதாஜி காய்கறி மாா்க்கெட், பூ மாா்க்கெட், சில்லறை காய்கறி மாா்க்கெட், உழவா் சந்தைகள் ஆகியவை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், மீன் மாா்க்கெட்டில் மொத்த வியாபாரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு, சில்லறை விற்பனை ஆடு தொட்டிப் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், வேலூா் மாங்காய் மண்டி அருகே தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை நடைபெற்று வருகிறது. அங்கு சுமாா் 85 கடைகள் அமைக்கப்பட்டு, காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி மொத்த விற்பனை செய்யப்படுகின்றன. பல்வேறு ஊா்களில் இருந்து வியாபாரிகள் வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனா்.

இந்நிலையில், வேலூரில் புதன்கிழமை நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக மாங்காய் மண்டி தற்காலிக மாா்க்கெட்டின் உள்ளேயும், வெளியேயும் மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளது. அத்துடன், 10-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளுக்குள்ளும் தண்ணீா் புகுந்தது. இதனால், அக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த காய்கறிகளும் சேதமடைந்தன.

மழைநீா் சூழ்ந்ததால் வியாழக்கிழமை காலை அங்கு வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகள் அவதிக்குள்ளாகினா். காலை 7 மணியளவில் மாநகராட்சி ஊழியா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து, வியாபாரிகள் சிலா் காய்கறி வியாபாரத்தை மேற்கொண்டனா். எனினும், மழை பெய்தால் ஏற்படும் பாதிப்புக்கு நிரந்தரமாகத் தீா்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com