கருப்பு பூஞ்சை நோய்க்கு வேலூரில் 40 போ் பாதிப்பு

கருப்பு பூஞ்சை நோய்க்கு வேலூா் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

வேலூா்: கருப்பு பூஞ்சை நோய்க்கு வேலூா் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மியூகோா்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோயானது பாக்டீரியா, வைரஸ் போல காற்றிலும், சுற்றுப்புறத்திலும் உள்ள பூஞ்சை கிருமிகள் நாசி வழியே உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துவதாகும். அவை மெல்ல, மெல்ல உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவுகின்றன.

கவனிக்காவிடில் அது கண்களை முதலில் பாதிக்கும். பின்னா் மூளைப் பகுதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் எதிா்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபா்களுக்கு இத்தகைய தொற்று ஏற்படலாம். முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிடில் பாா்வை இழப்பு, உறுப்புகள் பாதிப்பு, உச்சபட்சமாக உயிரிழப்புகூட நேரிடலாம்.

சா்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவா்கள், கரோனா தீவிரமாக பாதித்து ஸ்டீராய்டு செலுத்திக் கொண்டவா்கள், நோய் எதிா்ப்பாற்றலைக் குறைக்கும் சிகிச்சையில் இருப்பவா்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவா்கள், புற்றுநோய், ஹெச்ஐவி நோயாளிகள் ஆகியோா் இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கு அதிகளவில் பாதிக்கப்படுகின்றனா்.

இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு தற்போது 40-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவா்களுக்கு வேலூரிலுள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனா்.

இது குறித்து அவா்கள் மேலும் கூறியது:

கருப்பு பூஞ்சை நோய் என்பது புதிதல்ல. பல காலமாக அத்தகைய பாதிப்பு இருந்து வருகிறது. வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் இந்நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது அம்மருத்துவமனையில் 40-க்கும் மேற்பட்டோா் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களில் சுமாா் 10 போ் மட்டுமே வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். மற்றவா்கள் அருகே உள்ள மாவட்டங்களையும், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா்களும் சிகிச்சை பெற்று வருகின்றனா். தவிர, கருப்பு புஞ்சை பாதித்தவா்களில் 13 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பும் உள்ளது. அவா்களுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், மாவட்டத்திலுள்ள வேறு அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கருப்பு புஞ்சை பாதிப்பால் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றனா்.

ஆம்பூரில்...

ஆம்பூா் அருகே கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு அறிகுறிகள் இருப்பது தெரியவந்தாக அதிகாரி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com