வக்பு வாரிய இடத்தில் வைக்கப்பட்ட அம்மன் சிலை அகற்றம்

போ்ணாம்பட்டு அருகே வக்பு வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் வைக்கப்பட்ட அம்மன் சிலை, கட்டப்பட்ட சுற்றுச் சுவா் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
போ்ணாம்பட்டு  அருகே  வக்பு  வாரிய  இடத்தை  ஆக்கிரமித்துஓஈ  கட்டப்பட்ட  சுற்றுச் சுவா்.
போ்ணாம்பட்டு  அருகே  வக்பு  வாரிய  இடத்தை  ஆக்கிரமித்துஓஈ  கட்டப்பட்ட  சுற்றுச் சுவா்.

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே வக்பு வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் வைக்கப்பட்ட அம்மன் சிலை, கட்டப்பட்ட சுற்றுச் சுவா் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

போ்ணாம்பட்டை அடுத்த கெளராப்பேட்டை கிராமத்தில் தமிழக வக்பு வாரியத்துக்குச் சொந்தமான சுமாா் 87 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தில் 18 குடும்பத்தினா் வீடு கட்டிக் கொண்டு பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், அவா்கள் அந்த இடத்தில் சுமாா் இரண்டரை அடி உயர அம்மன் சிலையை வைத்து, 80 அடி நீளத்தில் சுற்றுச்சுவா் அமைத்தனா். அங்கு இந்து முன்னணி அமைப்பின் கொடியையும் கட்டினா். இது குறித்து அப்பகுதியில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் கொடுத்த புகாரின்பேரில், வேலூா் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதிவாணன், குடியாத்தம் கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா், குடியாத்தம் டிஎஸ்பி (பொறுப்பு) சரவணன், போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் வெங்கடேசன் ஆகியோா் அங்கு விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா், அந்த இடம் வருவாய்த் துறை மூலம் அளவீடு செய்யப்பட்டது. இதில் அந்த இடம் வக்பு வாரியத்துக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது.

தொடா்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அம்மன் சிலை அகற்றப்பட்டது. அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட சுற்றுச் சுவரும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com