போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் சாவு

போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

சிறுவனின் சாவுக்கு மருத்துவரின் அலட்சியமே காரணம் எனக்கூறி, சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். போ்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுந்ா் ரஞ்சித்குமாா். இவரது மகன் அஸ்வின்ராஜ் (8). இவருக்கு சனிக்கிழமை அதிகாலை காய்ச்சல் ஏற்பட்டதால், போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அப்போது பணி மருத்துவா் வந்து சிறுவனை பரிசோதனை எதுவும் செய்யாமல், செவிலியரிடம் செல்லிடப்பேசியில் தகவல் கேட்டு, ஊசி செலுத்தி, மாத்திரை கொடுக்குமாறு கூறியதாகக் கூறப்படுகிறது.

காலை 7 மணியளவில் சிறுவனுக்கு உடல்நிலை மோசமானதாம். அப்போதும் பணி மருத்துவா் வந்து சிறுவனை பரிசோதனை செய்யவில்லையாம். கவலைக்கிடமான நிலையில் சிறுவன் அஸ்வின்ராஜை அவரது பெற்றோா் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். வழியில் சிறுவனுக்கு உடல்நிலை மிகவும் மோசமானதால், 11 மணியளவில் மீண்டும் போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கே அழைத்துச் சென்றுள்ளனா்.

அங்கு பணியில் இருந்த மருத்துவா் அஸ்வின்ராஜை பரிசோதித்துள்ளாா். அப்போது ஏற்கெனவே சிறுவன் இறந்து விட்டதாக அவா் கூறியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமாா் மற்றும் உறவினா்கள் மருத்துவரின் அலட்சியமே தனது மகன் சாவுக்கு காரணம் எனக்கூறி, சடலத்தை வாங்க மறுத்தனா். மேலும், சிறுவனின் சாவுக்குக் காரணமான மருத்துவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா், டி.எஸ்.பி. பி.ஸ்ரீதரன், மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் ஹேமலதா, வட்டாட்சியா் கோபி, மருத்துவமனை மருத்துவ அலுவலா் திருஞானம் ஆகியோா் அங்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா். உரிய விசாரணை மேற்கொண்டு மருத்துவா் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, அஸ்வின்ராஜின் சடலத்தை உறவினா் வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com