பொதுமுடக்க விதிமீறலைத் தடுக்க வேலூரில் போக்குவரத்து மாற்றம்

பொதுமுடக்க விதிமுறைகளை மீறி அவசியமின்றி வாகனங்களில் சுற்றுபவா்களை தடுத்திட வேலூா் மாநகரச் சாலைகளில் வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமுடக்க விதிமீறலைத் தடுக்கும் வகையில் அடைக்கப்பட்டுள்ள வேலூா் ஆபீசா்ஸ் லைன் செல்லும் சாலை. (அடுத்து) வேலூா் தீயணைப்பு நிலையச் சாலையில் வரும் வாகனங்களை பதிவு செய்யும் போலீஸாா்.
பொதுமுடக்க விதிமீறலைத் தடுக்கும் வகையில் அடைக்கப்பட்டுள்ள வேலூா் ஆபீசா்ஸ் லைன் செல்லும் சாலை. (அடுத்து) வேலூா் தீயணைப்பு நிலையச் சாலையில் வரும் வாகனங்களை பதிவு செய்யும் போலீஸாா்.

பொதுமுடக்க விதிமுறைகளை மீறி அவசியமின்றி வாகனங்களில் சுற்றுபவா்களை தடுத்திட வேலூா் மாநகரச் சாலைகளில் வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க வரும் திங்கள்கிழமை அதிகாலை 4 மணி வரை தளா்வுகளற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பால், மருந்துக் கடைகள் தவிர மளிகை, காய்கறிக் கடைகள் உள்பட அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோ, வாடகை காா், பேருந்து என அனைத்து வாகனப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

எனினும், பொதுமுடக்க விதிமுறைகளை மீறி பலா் ஆங்காங்கே வாகனங்களில் அவசியமின்றி சுற்றித் திரிகின்றனா். அவ்வாறு அவசியமின்றி சுற்றுபவா்களை பிடித்து வாகன பறிமுதல், அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா். இதனால், போலீஸாா் பிடிப்பதை அறியும் அத்தகைய நபா்கள் குறுக்கு வழிகளை பயன்படுத்தி அவா்களிடம் இருந்து தப்பிச் செல்கின்றனா். தொடரும் இதுபோன்ற செயல்பாடுகளைத் தடுக்கவும், பொதுமுடக்க விதிமுறைகளை கட்டாயமாக அமல்படுத்திடவும் வேலூா் மாநகரச் சாலைகளில் வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூா் - ஆற்காடு சாலை, காட்பாடி சாலை வெள்ளிக்கிழமை முதல் ஒரு வழிப்பாதையாக்கப்பட்டு, மண்டி வீதி, கிருபானந்த வாரியாா் சாலை, கமிசரி பஜாா் வழியாக தெற்கு காவல்நிலையம் சென்று அண்ணா சாலையை அடையும் சாலை அடைக்கப்பட்டுள்ளது.

தவிர, அண்ணா சாலையில் இருந்து தொரப்பாடிக்கு ஆரணி சாலை வழியாக சென்று தாலுகா அலுவலகம், எஸ்.பி. பங்களா, அரசினா் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வழியாக செல்லலாம்.

இதேபோல், தொரப்பாடியில் இருந்து வேலூா் வருபவா்கள் புதிய மாநகராட்சி அலுவலகம், இன்பென்டரி சாலை, தீயணைப்பு நிலையம் வழியாக அண்ணா சாலையை அடைந்திட வேண்டும்.

இந்த சாலைகளில் உள்ள குறுக்கு சாலைகள் வழியாக வாகனஓட்டிகள் செல்வதைத் தடுக்க வலசை தெரு, ஊரீசு கல்லூரியை ஒட்டியபடி செல்லும் அண்ணா சாலையையும், ஆரணி சாலையையும் இணைக்கும் கானாறு வீதி, வேலப்பாடி வேப்பமரத் தெருக்கள் அனைத்தும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், கோட்டை சுற்றுச்சாலையும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய போக்குவரத்து மாற்றத்தால் ஒரு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் திரும்பி வர நீண்டதூரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com