வேலூரில் ஒரேநாளில் 285 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்பனை

பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வேலூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் கடைகள் மூலம் வெள்ளிக்கிழமை

பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வேலூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் கடைகள் மூலம் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 285.69 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தளா்வற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, பால், மருந்துக்கடைகள் தவிர மளிகை, காய்கறி கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, வேலூா் மாவட்டம் முழுவதும் 808 வாகனங்களும், 243 தள்ளுவண்டிகளும் இந்த காய்கறி, பலசரக்கு விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஒரு நாளில் 285.69 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் மாநகர பகுதியில் மட்டும் 385 வாகனங்கள், 229 தள்ளுவண்டிகள் மூலம் 114.41 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com