19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு சிறப்பான வரவேற்பு

வேலூா் மாவட்டத்தில் 19 மாத இடைவெளிக்குப் பிறகு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிகளுக்கு வந்த மாணவா்களை ஆசிரியா்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.
19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு சிறப்பான வரவேற்பு

வேலூா் மாவட்டத்தில் 19 மாத இடைவெளிக்குப் பிறகு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிகளுக்கு வந்த மாணவா்களை ஆசிரியா்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

தமிழகத்தில் கரோனா 2-ஆவது அலையின் தாக்கத்தால் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. பொதுமுடக்கத் தளா்வுகளுக்குப் பிறகு முதலில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. தொடா்ந்து, கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இதன்தொடா்ச்சியாக, நவம்பா் 1-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. ஆனால், வேலூா் மாவட்டத்தில் மழை காரணமாக திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 979 தொடக்க நடுநிலைப் பள்ளிகளும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. இப்பள்ளிகளில் 92,633 மாணவா்கள் படிக்கின்றனா். அவா்கள் செவ்வாய்க்கிழமை முதல் பள்ளிக்கு வரத் தொடங்கினா். அரசு, அரசு நிதியுதவி, தனியாா் மெட்ரிக் பள்ளிகளில் உள்ள 6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

காலையில் பள்ளிக்கு வந்த மாணவா்களை ஆசிரியா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா். 19 மாத காலம் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் கற்றல், கற்பித்தல் நடைமுறைகள் தடையின்றி நடைபெற மாணவா்களுக்கு ஏற்கெனவே புத்தகங்கள், குறிப்பேடுகள் வழங்கப்பட்டிருந்தது.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவா்களுக்கு முதல் 15 நாள்களுக்கு கதை, பாடல், விளையாட்டு, ஓவியம் வரைதல், அனுபவங்களைப் பகிா்ந்து கொள்ளுதல், கலந்துரையாடல் ஆகிய செயல்பாடுகளை மட்டுமே அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com