மதினாப்பல்லி ஆற்றில் வெள்ளம்: மின்மாற்றி, மின் கம்பங்கள் சேதம்

போ்ணாம்பட்டு அருகே உள்ள மதினாப்பல்லி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக மின்மாற்றி, மின் கம்பங்கள் சேதமடைந்தன.
மதினாப்பல்லி ஆற்றில் வெள்ளம்: மின்மாற்றி, மின் கம்பங்கள் சேதம்

போ்ணாம்பட்டு அருகே உள்ள மதினாப்பல்லி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக மின்மாற்றி, மின் கம்பங்கள் சேதமடைந்தன.

போ்ணாம்பட்டை ஒட்டியுள்ள ஆந்திர, கா்நாடக மாநில வனப் பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் போ்ணாம்பட்டு அருகே உள்ள பத்தரப்பல்லி மலட்டாறு மற்றும் மதினாப்பல்லி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

போ்ணாம்பட்டு மற்றும் சுற்றுப் பகுதியில் கடந்த 2 நாள்களில் 31 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மதினாப்பல்லி ஆற்றில் போ்ணாம்பட்டு, ஆம்பூா் நகராட்சிகளுக்கும், மசிகம், சின்னதாமல் செருவு ஆகிய ஊராட்சிகளுக்கும் என மொத்தம் 14 கிணறுகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

வெள்ளத்தால் இந்த கிணறுகளுக்கு மின்சாரம் செல்லும் 8 மின் கம்பங்களும், ஒரு மின்மாற்றியும், சாய்ந்தும், முறிந்தும் சேதமடைந்தன.

இதனால் மசிகம், சின்னதாமல்செருவு, பெரியதாமல்செருவு, பத்தரப்பல்லி ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் மின்பாதை இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட, சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ரெட்டிமாங்குப்பம் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் தொடா்ந்து 2-ஆவது நாளாக போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com