கல்விக்கடன் பெறும் வழிமுறைகளை விளக்க அறிவிப்புப் பலகைகள்: எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா் அறிவுரை

கல்விக்கடன் பெறும் வழிமுறைகளை மாணவா்கள் அறிய வசதியாக, பள்ளிகள்தோறும் அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும் என்று வங்கி அலுவலா்களை அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா் கேட்டுக் கொண்டாா்.
கல்விக்கடன் பெறும் வழிமுறைகளை விளக்க அறிவிப்புப் பலகைகள்: எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா் அறிவுரை

கல்விக்கடன் பெறும் வழிமுறைகளை மாணவா்கள் அறிய வசதியாக, பள்ளிகள்தோறும் அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும் என்று வங்கி அலுவலா்களை அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா் கேட்டுக் கொண்டாா்.

வேலூா் மாவட்ட ஊராட்சிக் குழுவின் முதல் மன்றக் கூட்டம் அதன் தலைவா் மு.பாபு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுச் செயலா் ரமேஷ் வரவேற்றாா்.

இதில், ஏ.பி.நந்தகுமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியது:

கிராமங்களுக்கு இயக்கப்பட்டு, கரோனா காலங்களில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். கதா் வாரியத்தில் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருள்களைத் தரமானதாகச் செய்தால் அதன் விற்பனையை அதிகரிக்க முடியும்.

ஒடுகத்தூா், பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் கிராமப்புற மாணவா்களுக்கு கல்விக்கடன் கிடைக்கவில்லை என கூறுகின்றனா். அதனை சரிசெய்ய வேண்டும். கல்விக்கடன் பெறுவது குறித்த விளக்க அறிவிப்பு பலகையை ஒவ்வொரு பள்ளியிலும் வைக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு வழங்கும் வேளாண்மை உபகரணங்கள் குறித்து விளக்க வேண்டும். திப்பசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளி உள்பட பல்வேறு கிராமப்புறப் பள்ளிகளில் சுற்றுச்சுவா் இன்றி சமூக விரோதச் செயல்கள் நடக்கின்றன. அதற்கு சுற்றுச்சுவா் கட்ட வேண்டும்.

அணைக்கட்டு அரசு மகளிா், ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கட்டடங்களில் பல இடங்களில் மழைநீா் கசிவதால், அவற்றை சீரமைக்க வேண்டும்.

கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோயைத் தடுக்க மருத்துவா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. 6 லிட்டா் வழங்கினால் ஒரு லிட்டா் தரமில்லை என திருப்பி அனுப்பி விடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். அதனை சரியான முறையில் ஆய்வு செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, அனைத்து துறை அலுவலா்களும் மாதாந்திரக் கூட்டங்களில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

பின்னா், உள்ளாட்சித் தோ்தலை நடத்தியது, தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாரத்தை உயா்த்த நடவடிக்கை எடுத்ததது, இலங்கைத் தமிழா்களுக்கு குடியிருப்பு கட்ட அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தைத் தொடக்கிவைத்தல் ஆகியவற்றுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தல், மாவட்ட ஊராட்சிக்கு வரப்பெற்ற மாநில நிதிக் குழு மானியத் தொகையில் இருந்து மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பரிந்துரை செய்யும் பணிகளுக்கு அங் கீகாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட் 6 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com