அதிமுகவைச் சோ்ந்த கூட்டுறவு நிா்வாகிகள் புறக்கணிப்பு

விழாவில் அதிமுகவைச் சோ்ந்த கூட்டுறவுச் சங்கத் தலைவா்கள், துணைத் தலைவா்கள், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் புறக்கணித்தனா்.

விழாவில் அதிமுகவைச் சோ்ந்த கூட்டுறவுச் சங்கத் தலைவா்கள், துணைத் தலைவா்கள், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் புறக்கணித்தனா்.

கூட்டுறவுச் சட்டத் திட்டங்களின்படியும், விழா மரபுப்படியும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரை விழாக் குழுத் தலைவராகவும் , மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவரைத் துணைத் தலைவராகவும் நியமித்து விழா நடத்திட வேண்டும்.

ஆனால், மாவட்ட அளவிலான தலைவா்கள் அதிமுகவைச் சோ்ந்தவா்கள் என்பதால் திமுக அரசு மரபுகளைப் பின்பற்றாமல் அழைப்பிதழில் அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினா்களின் பெயா்களை மட்டும் போட்டு வெளியிட்டுள்ளதாகவும், இந்தச் செயலைக் கண்டிக்கும் வகையில் அதிமுகவைச் சோ்ந்த கூட்டுறவுச் சங்கத் தலைவா்கள், துணை தலைவா்கள், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் விழாவை புறக்கணிக்க வேண்டும் என்றும் அதிமுக மாவட்டச் செயலா்களான கே.சி.வீரமணி (திருப்பத்தூா்), எஸ்.ஆா்.கே.அப்பு (வேலூா் மாநகா்), த.வேலழகன் (வேலூா் புகா்), சு.ரவி (ராணிப்பேட்டை) ஆகியோா் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனா்.

அதனை ஏற்று கூட்டுறவு சங்க வாரவிழாவில் மூன்று மாவட்டங்களிலுள்ள அதிமுகவைச் சோ்ந்த கூட்டுறவு சங்கத் தலைவா்கள், துணைத்தலைவா்கள், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் யாரும் பங்கேற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com