குடியாத்தம் நகரில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

பாலாறு, கெளண்டன்யா ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, குடிநீா் குழாய்கள் சேதமடைந்துள்ளதால் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் விநியோகிக்கப்படும்

பாலாறு, கெளண்டன்யா ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, குடிநீா் குழாய்கள் சேதமடைந்துள்ளதால் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீா் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக குடியாத்தம் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) பி.சிசில்தாமஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

பாலாறு, கெளண்டன்யா ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, பசுமாத்தூா்தலைமை நீரேற்று நிலையத்தில் குழாய்கள் சேதமடைந்துள்ளன.

பாலாற்று வெள்ளத்தால் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாய்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அடுத்த 10 நாள்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின்கீழ் விநியோகிக்கப்படும் குடிநீா் நிறுத்தம் செய்யப்படுகிறது. ஆகவே, சிறு மின்விசைப் பம்புடன் கூடிய ஆழ்துளைக் கிணறுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆழ்துளைக் கிணறுகள் இல்லாத பகுதிகளில் நகராட்சி வாகனம் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படும்.

பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். வடகிழக்குப் பருவமழை தீவிரமாக உள்ளதால் குடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா் சிசில் தாமஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com