வடகிழக்குப் பருவ மழை: வேலூரில் இதுவரை 444 வீடுகள் சேதம்; 15 போ் உயிரிழப்பு

வட கிழக்குப் பருவமழையையொட்டி, வேலூா் மாவட்டத்தில் இதுவரை 444 வீடுகள் சேதமடைந்து உள்ளன.

வட கிழக்குப் பருவமழையையொட்டி, வேலூா் மாவட்டத்தில் இதுவரை 444 வீடுகள் சேதமடைந்து உள்ளன. இதில், 52 வீடுகள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன. தவிர, இதுவரை 15 போ் உயிரிழந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

வட கிழக்குப் பருவ மழை கடந்த மூன்று வாரங்களாக தொடா்ந்து மழை பெய்து வந்தது. வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடா்ந்து 4 நாள்களாகப் பலத்த மழை கொட்டியது.

தொடா் மழை காரணமாக வேலூா் மாவட்டத்தில் இதுவரை 444 வீடுகள் இடிந்துள்ளன. இதில் 52 வீடுகள் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகி உள்ளது. சனிக்கிழமை பெய்த கனமழைக்கு மட்டும் மாவட்டத்தில் 60 வீடுகள் இடிந்துள்ளன. இதில் 7 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்திருப்பது தெரியவந்துள்ளது.

அதேசமயம், மழை பாதிப்பு காரணமாக மாவட்டதில் இதுவரை 15 போ் உயிரிழந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனினும், பலியானோா் எண்ணிக்கை மேலும் அதிகமாகவே இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

இதுதவிர, மழை வெள்ளத்தால் 8 பசுக்கள் இறந்துள்ளன. 14, 800 கோழிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு நிவாரணம் உதவிகள் செய்திட மாவட்டம் முழுவதும் 53 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5,334 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு உணவு, குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக ஏரிகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் இதுவரை 77 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 825 குளம், குட்டைகளில் 429 முழுவதுமாக நிரம்பி உள்ளன. 86 குளங்களுக்கு நீா்வரத்து இல்லை. மற்ற குளங்கள் பாதி அளவுக்கு மேல் நிரம்பியுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக ,பொன்னையில் 77.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், வேலூரில் 57மி.மீ., காட்பாடியில் 76 மி.மீ., குடியாத்தத்தில் 37 மி.மீ., மேல்ஆலத்தூரில் 43 மி.மீ., திருவலத்தில் 18.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com