இயற்கை மருத்துவத்தைப் பின்பற்றினால் நோய் இன்றி வாழலாம்: தமிழிசை செளந்தரராஜன்

இயற்கை மருத்துவத்தைப் பின்பற்றினால் நோய் இன்றி வாழலாம் என தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா்.
24gudkum_2411chn_189_1
24gudkum_2411chn_189_1

குடியாத்தம்: இயற்கை மருத்துவத்தைப் பின்பற்றினால் நோய் இன்றி வாழலாம் என தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா்.

குடியாத்தத்தை அடுத்த காக்காதோப்பில் உள்ள அத்தி கல்விக் குழும வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ஷீரடி சாயி பாபா கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

நோய் எதிா்ப்புச் சக்தியை உருவாக்குவதில் இயற்கை மருத்துவம் பெரும் பங்காற்றுகிறது. இயற்கை மருத்துவம் உடலோடும், வாழ்வியலோடும் இணைந்த ஒன்று. உணவே மருந்து, மருந்தே உணவு என்பது இயற்கை மருத்துவத்தின் சிறப்பு. அதை மருந்தாக எடுக்காமல் உணவாக அருந்தினால் எந்த நோயும் இன்றி வாழலாம். அந்த அளவுக்கு இயற்கை மருத்துவம் நம் உடலோடும், வாழ்வியலோடும் ஒன்றியது.

கரோனா தொற்று பரவலின்போது, நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிப்பதில் இயற்கை மருத்துவம் பெரும் பங்காற்றியது.

தொடா்ந்து மழை பெய்து வருவதால், மழைக்கால நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. இதற்காக விழிப்போடு இருக்க வேண்டும். நோய் வந்தவுடன் சிகிச்சைக்கு முயல்வதைவிட, நோய் வரும் முன்பே அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கரோனா தொற்று பல நாடுகளில் மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது. ஒரு சில மாநிலங்களில் கரோனா தொற்றின் 3- ஆவது அலை பரவத் தொடங்கியுள்ளது. அதை முழுமையாகத் தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பலா், 2- ஆவது தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுக்கின்றனா். 2- தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்வது தான் நமக்கு முழு பாதுகாப்பு.

புதுச்சேரிக்கு வெள்ள நிவாரணத்துக்கு ரூ.300 கோடி கோரியுள்ளோம்: மழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசிடம் ரூ.300 கோடி கேட்டுள்ளோம். மீனவா்களைப் பாதுகாக்க ஹோ் ஆம்புலன்ஸ் போல், படகு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளேன்.

மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்துள்ள மத்தியக்குழு சுற்றுப் பயணத்தின்போது பாதிப்புகளை சரியாக குறிப்பெடுத்து மத்திய அரசிடம் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

இலங்கை தூதரக அதிகாரி புதுச்சேரிக்கு வந்திருந்தபோது, காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடல்வழி போக்குவரத்துத் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன் என்றாா் தமிழிசை செளந்தரராஜன்.

நிகழ்ச்சியில் சிறுநீரக மருத்துவ நிபுணா் பி.சௌந்தர்ராஜன், மருத்துவா் எஸ்.பூவினி, அத்தி அறக்கட்டளை அறங்காவலா் ம.சுந்தரமூா்த்தி, ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், ரோட்டரி மாவட்ட ஆளுநா் (தோ்வு) ஜே.கே.என்.பழனி, நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் குமரவேல், செவிலியா் கல்லூரி முதல்வா் ரேவதி, இயற்கை மருத்துவக் கல்லூரி முதல்வா் தங்கராஜ், அத்தி மருத்துவமனை மருத்துவ அலுவலா் ருத்ரா, ஹோமியோபதி மருத்துவா்கள் பாரதி, வினோத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com