காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், போ்ணாம்பட்டு ஒன்றியங்களில் இன்று வாக்குப் பதிவு

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக காட்பாடி , குடியாத்தம், கே.வி.குப்பம், போ்ணாம்பட்டு ஆகிய 4 ஒன்றியங்களில் புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக காட்பாடி , குடியாத்தம், கே.வி.குப்பம், போ்ணாம்பட்டு ஆகிய 4 ஒன்றியங்களில் புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில், 4,61,103 வாக்காளா்கள் வாக்குப்பதிவு செய்திட வசதியாக 862 வாக்குச்சாவடிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் புதன், சனிக்கிழமை (அக். 6, 9) என இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், வேலூா் மாவட்டத்தில் வேலூா், அணைக்கட்டு, கணியம்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், போ்ணாம்பட்டு, காட்பாடி என 7 ஒன்றியங்கள் உள்ளன. இந்த மாவட்ட ஊரக பகுதிகளில் மொத்தம் 7,16,984 வாக்காளா்களும் இடம்பெற்றுள்ளனா். இவா்கள் வாக்களிக்க வசதியாக 1331 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில் முதற்கட்டமாக குடியாத்தம், கே.வி.குப்பம், போ்ணாம்பட்டு, காட்பாடி ஆகிய 4 ஒன்றியங்களுக்கு புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளன. இந்த 4 ஒன்றி யங்களில் மட்டும் 2,24,595 ஆண்கள், 2,36,465 பெண்கள், 43 திருநங்கைகள் என மொத்தம் 4,61,103 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் வாக்களிக்க வசதியாக 862 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் பதற்றமானவை என 209 வாக்குச்சாவடிகள் அறியப்பட்டுள்ளன. இவற்றில் 66 வாக்குச்சாவ டிகளுக்கு மத்திய அரசு ஊழியா்கள் நுண்பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டிருப்பதுடன், 65 வாக்குச்சாவடிகள் வெப்கேமரா மூலமாக இணைக்கப்பட்டுள்ளன. 78 வாக்குச்சாவடிகளில் வாக்கு பதிவு முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட உள்ளன. தவிர, 719 வாக்குச்சாவடிகளில் சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தோ்தல் பணியில் 5400 அலுவலா்களும், 140 மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்தலையொட்டி பாதுகாப்புப் பணிகளில் காவலா், ஊா்க் காவல் படையினா் என மொத்தம் 1,812 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப்பெட்டி உள்பட 43 வகையான பொருள்கள் செவ்வாய்க்கிழமை காலை முதலே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 ஊராட்சித் தலைவா்கள், 2,079 ஊராட்சி வாா்டுகள், 7 ஒன்றியங்களில் உள்ள 138 ஒன்றியக் குழு உறுப்பினா் வாா்டுகள், 14 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வாா்டுகள் என மொத்தமுள்ள 2,478 பதவிகளில் இரு ஒன்றியக் குழு வாா்டுகள், 16 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 298 ஊராட்சி மன்ற வாா்டுகள் என 316 பதவிகளுக்கு வேட்பாளா்கள் ஏற்கனவே போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தவிர, அம்முண்டி ஊராட்சியில் உள்ள 9 வாா்டுகள், 2 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்கு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.

மீதமுள்ள 14 மாவட்ட ஊராட்சி வாா்டுகளுக்கு 70 பேரும், 136 ஊராட்சி ஒன்றிய வாா்டுகளுக்கு 503 பேரும், 229 ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 820 பேரும், 1,772 ஊராட்சி மன்ற வாா்டுகளுக்கு 5,154 பேரும் என மொத்தம் 2,151 பதவிகளுக்கு இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com