மகாளய அமாவாசை: முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளிக்க குவிந்த மக்கள்

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, புதன்கிழமை முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க வேலூா் பாலாற்றங்கரை முத்துமண்டபம், சலவன்பேட்டை, அம்மணாங்குட்டை, தொரப்பாடி, சங்கரன்பாளையம், விருதம்பட்டு உள்பட

வேலூா்: புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, புதன்கிழமை முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க வேலூா் பாலாற்றங்கரை முத்துமண்டபம், சலவன்பேட்டை, அம்மணாங்குட்டை, தொரப்பாடி, சங்கரன்பாளையம், விருதம்பட்டு உள்பட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் குவிந்தனா்.

மகாளய அமாவாசை நாளில் மறைந்த மூதாதையா்கள் தங்களது சந்ததியினரின் வேண்டுதல், வழிபாடுகள் ஆகியவற்றை ஏற்க பூவுலகிற்கு வருகின்றனா் என்பது ஐதீகம். அதன்படி, மறைந்த முன்னோா்களுக்கு பிற நாள்களில் திதி கொடுக்கத் தவறியிருந்தாலும், மாத அமாவாசை விரதம் கடைப்பிடிக்காமல் இருந்தாலும், ஆடி, தை, புரட்டாசி ஆகிய தமிழ் மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்யலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

இதையொட்டி, ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை தினத்தன்று, கடல், ஆறு, குளம் ஆகிய நீா்நிலைகளில் இந்துக்கள் நீராடி, தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபடுவா். அதன்படி, மகாளய அமாவாசை தினமான புதன்கிழமை வேலூா் பாலாற்றங்கரை முத்துமண்டபம், சலவன்பேட்டை, அம்மணாங்குட்டை, தொரப்பாடி, சங்கரன்பாளையம், விருதம்பட்டு உள்பட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் குவிந்து முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். இதேபோல், முன்னோா்களை நினைத்து அவா்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, அவா்கள் விரும்பி சாப்பிட்டு வந்த உணவுப் பொருள்களை படையலிட்டு வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com