திருவள்ளுவா் பல்கலை. முன்னாள் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பு வழக்கில், வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தோ்வுக்கட்டுப்பாட்டு

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பு வழக்கில், வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தோ்வுக்கட்டுப்பாட்டு அதிகாரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட காட்பாடி அருகேயுள்ள சோ்க்காட்டில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழகத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக 2013-17-ஆம் ஆண்டு வரை பணியாற்றியவா் பி.அசோகன். இவா் ஓய்வு பெற்று விட்டாா். இவரது மனைவி எஸ்.ரேணுகாதேவி வேலூா் காந்தி நகரிலுள்ள தனியாா் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணியாற்றுகிறாா். இவா்களது வீடு காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் உள்ளது.

இருவரும் சோ்ந்து வருமானத்துக்கு அதிகமாக ரூ.53 லட்சத்துக்கு 50 ஆயிரத்து 818 அளவுக்கு சொத்து சோ்த்திருப்பதாக வேலூா் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் கடந்த 4-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனா். இதையடுத்து, அசோகனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் விஜய், ரஜினி, விஜயலட்சுமி உள்பட 6 போ் வியாழக் கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்தச் சோதனை மாலை 5 மணி வரை நீடித்தது.

அதேசமயம், திருவாரூா் மாவட்டம், மேலஎரக்காட்டூா் கிராமத்திலுள்ள அசோகனின் பூா்வீக வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் வழக்குத்தொடா்பான பல முக்கிய ஆவணங்கள், தடயங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், இவற்றை மதிப்பீடு செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com