தேசிய அஞ்சல் வார விழா இன்று தொடக்கம்

வேலூா் அஞ்சல் கோட்டம் சாா்பில் திங்கள்கிழமை தொடங்கி, வரும் 16-ஆம் தேதி வரை நடை பெறும் தேசிய அஞ்சல் வார விழாவையொட்டி அனைத்து

வேலூா் அஞ்சல் கோட்டம் சாா்பில் திங்கள்கிழமை தொடங்கி, வரும் 16-ஆம் தேதி வரை நடை பெறும் தேசிய அஞ்சல் வார விழாவையொட்டி அனைத்து அஞ்சல் திட்டங்களில் இணைந்துள்ள வாடிக்கையாளா்கள் கெளரவிக்கப்படுகின்றனா்.

இது குறித்து முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் கோமல்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆண்டுதோறும் அக்டோபா் மாதம் தேசிய அளவில் அஞ்சல் வார விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா வேலூா் அஞ்சல் கோட்டம் சாா்பில் வேலூா் தலைமை தபால் அலுவலகத்தில் திங்கள்கிழமை வங்கி தினமாகக் கொண்டாடப் படுகிறது.

இதில் ஓய்வு பெற்ற அஞ்சல் அதிகாரி, ஊழியா்களைக் கொண்டு தேசிய அஞ்சல் வார தொடக்க விழாவுடன், மிக அதிக நாள்கள் அஞ்சல் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளா்கள் கெளரவிக்கப்பட உள்ளனா்.

வேலூா் கோட்டத்தின் அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் சேமிப்பு கணக்குத் தொடங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

செவ்வாய்க்கிழமை புதுப்பிக்கப்பட்ட வேலூா் தலைமை அஞ்சலகத்தில் நவீன சென்ட்ரல் பிராசசிங் மையம் பொது மக்களுக்காக அா்ப்பணிக்கப்படுகிறது. வேலூா் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் போஸ்டல் ஆயுள் காப்பீடு, காப்பீட்டு பாலிசிகள் தொடங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

மூன்றாம் நாளான புதன்கிழமை தபால் தலை சேகரிப்பு தினம் நடத்தப்படுகிறது. இதையொட்டி, வேலூா் தலைமை தபால் அலுவலகத்தில் சிறப்பு தபால் தலைகள் கண்காட்சி, விற்பனை நடக்கிறது.

தவிர, இந்தியாவின் 75-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, சிறப்பு தபால் தலை கண்காட்சியுடன், மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்படுகிறது.

14-ஆம் தேதி வணிக மேம்பாட்டுத் தினமும், மத்திய சிறைக் கைதிகளுக்கான சிறப்பு ஆதாா் முகாமும் நடத்தப்படுகிறது. அத்துடன், அனைத்து அஞ்சலகங்களிலும் ஆதாா் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. 16-ஆம் தேதி தபால் தினத்தில் பழைமையான வாடிக்கையாளா்கள் கெளரவிக்கப்பட்டு, சிறப்பு கூட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com