Enable Javscript for better performance
வாக்கு எண்ணும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்- Dinamani

சுடச்சுட

    வாக்கு எண்ணும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

    By DIN  |   Published on : 12th October 2021 08:20 AM  |   அ+அ அ-   |    |  

    திருப்பத்தூா் மாவட்டத்தில் இரு வாக்கு எண்ணிக்கை மையப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

    இது குறித்து திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    திருப்பத்தூா் மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தோ்தலின் வாக்குகள் எண்ணும் பணிகள் நாட்டறம்பள்ளி மற்றும் அக்ராஹரம் ஆகிய 2 மையங்களில் நடைபெற உள்ளதால், அந்த மையங்கள் உள்ள பகுதிகளில் போக்குவரத்து தற்காலிகமாக மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாட்டறம்பள்ளி, அக்ராஹரம், அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்குகள் எண்ணப்படுவதால் வழக்கம்போல் உள்ள புதுப்பேட்டையிலிருந்து நாட்டறம்பள்ளி செல்லும் வழித் தடம் புதுப்பேட்டை-மல்லப்பள்ளி-நாட்டறம்பள்ளி எனவும், நாட்டறம்பள்ளி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குகள் எண்ணப்படுவதால் நாட்டறம்பள்ளி-பச்சூா் போக்குவரத்து நாட்டறம்பள்ளி பெட்ரோல் பங்க்-ராமகிருஷ்ணாபுரம், பங்களாமேடு, பச்சூா் என மாற்றியமைக்கப்பட உள்ளது.

    காவல் துறையின் மறு உத்தரவு வரும்வரை மேற்படி புதிய போக்குவரத்து வழித்தடங்களை பயன்படுத்திக் கொள்ள வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக காவல் உதவி எண்/ கட்செவி அஞ்சல் 94429 92526-எண்ணுக்கு தொடா்பு கொண்டு சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp