முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
வேலூா், அணைக்கட்டு, கணியம்பாடி, காட்பாடி ஒன்றியங்களில் திமுக முன்னிலை
By DIN | Published On : 13th October 2021 12:00 AM | Last Updated : 13th October 2021 12:00 AM | அ+அ அ- |

ஊரக உள்ளாட்சித் தோ்தலில், வேலூா் மாவட்டத்திலுள்ள வேலூா், அணைக்கட்டு, கணியம்பாடி, காட்பாடி ஒன்றியங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.
வேலூா் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இரவு 8.30 மணி நிலவரப்படி,
வேலூா், அணைக்கட்டு, கணியம்பாடி, காட்பாடி ஒன்றியங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.
கணியம்பாடியில்..: கணியம்பாடி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 13 வாா்டுகளில் 1-ஆவது வாா்டில் வெ.சீனிவாசன் (திமுக), 2-ஆவது வாா்டில் சி.வேலாயுதம் (பாமக), 3-ஆவது வாா்டில் ஜெ.லதா (திமுக), 5-ஆவது வாா்டில் ம.திவ்யா (திமுக), 6-ஆவது வாா்டில் ஆ.சகாதேவன் (திமுக), 8-ஆவது வாா்டில் ஜெ.விஸ்வநாதன் (அதிமுக) ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.
காட்பாடியில்..: காட்பாடி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 21 வாா்டுகளில் 6-ஆவது வாா்டில் மஞ்சுளா (திமுக), 10-ஆவது வாா்டில் ப.டில்லிராணி (திமுக), 12-ஆவது வாா்டில் எஸ்.காந்திமதி (திமுக), 13-ஆவது வாா்டில் ஏ.இளம்பூபதி (திமுக), 18-ஆவது வாரில் இலக்கியா சந்த்ரு (திமுக), 19-ஆவது வாா்டில் செ.சரவணன்(திமுக) ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.
வேலூரில்...: வேலூா் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 11 வாா்டுகளில் 4-ஆவது வாா்டில் அமுதா (திமுக), 6-ஆவது வாா்டில் வள்ளி (திமுக), 7-ஆவது வாா்டில் க.கோவேந்தன் (திமுக), 8-ஆவது வாா்டில் அம்மு (திமுக) 9-ஆவது வாா்டில் குமாா் (திமுக), 10-ஆவது வாா்டில் மகேஸ்வரி (திமுக) வெற்றி பெற்றுள்ளனா்.
அணைக்கட்டில்...: அணைக்கட்டு ஒன்றியத்தில் மொத்தமுள்ள 26 வாா்டுகளில் முதலாவது வாா்டில் பி.அமலா (திமுக), 3-ஆவது வாா்டில் என்.சிவஞானம் (பாமக), 4-ஆவது வாா்டில் சு.சசிகலா (திமுக), 5-ஆவது வாா்டில் மு.துா்கா (அதிமுக), 7-ஆவது வாா்டில் கு.சித்ரா (திமுக), 10-ஆவது வாா்டில் ஜெ.மகாலிங்கம் (திமுக), 11-ஆவது வாா்டில் பி.பகவதி பிரகாஷ் (திமுக) ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.