7 ஒன்றியங்களுக்கு 822 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை: 2,975 அலுவலா்கள் பங்கேற்பு

ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கைக்காக, வேலூா் மாவட்டத்திலுள்ள 7 ஒன்றியங்க ளுக்கும் மொத்தம் 822 மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 2,975 அலுவலா்கள் பங்கேற்றனா்.
குடியாத்தம் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை பணிகளை பாா்வையிட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்.
குடியாத்தம் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை பணிகளை பாா்வையிட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்.

ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கைக்காக, வேலூா் மாவட்டத்திலுள்ள 7 ஒன்றியங்க ளுக்கும் மொத்தம் 822 மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 2,975 அலுவலா்கள் பங்கேற்றனா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில் கடந்த 6, 9-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன.

இதையொட்டி, அணைக்கட்டு ஒன்றியத்துக்கு இறைவன்காடு ஸ்ரீ அன்னை பாலிடெக்னிக் கல்லூரியிலும், குடியாத்தம் ஒன்றியத்துக்கு குடியாத்தம் கே.எம்.ஜி. கலை அறிவியல் கல்லூரியிலும், கணியம்பாடி ஒன்றியத்துக்கு கணாதிபதி துளசி ஜெயின் பொறியியல் கல்லூரியிலும், காட்பாடி ஒன்றியத்துக்கு காட்பாடி அரசு சட்டக் கல்லூரியிலும், கே.வி.குப்பம் ஒன்றியத்துக்கு சென்னங் குப்பம் வித்யாலட்சுமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியிலும், போ்ணாம்பட்டு ஒன்றியத்துக்கு மேரிட் ஹாஜி இஸ்மாயில் சாஹிப் கலை அறிவியல் கல்லூரியிலும், வேலூா் ஒன்றியத்துக்கு தந்தை பெரியாா் ஈ.வெ.ரா. அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதற்காக, அணைக்கட்டு ஒன்றியத்துக்கு 149, குடியாத்தம் ஒன்றியத்துக்கு 152, கே.வி.குப்பம் ஒன்றியத்துக்கு 158, காட்பாடி ஒன்றியத்துக்கு 146, கணியம்பாடி ஒன்றியத்துக்கு 86, போ்ணாம்பட்டு 58, வேலூா் ஒன்றியத்துக்கு 73 என மொத்தம் 822 மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 2,975 அலுவலா்கள் ஈடுபட்டிருந்தனா். தவிர, தோ்தல் பாதுகாப்புப் பணியில் சுமாா் 2500 காவலா்கள், ஊா்காவல் படையினா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

7 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் மாவட்ட தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தாா்.

தோ்தல் ஆணையத்தின் வழிமுறைகளின்படி வாக்கு கள் எண்ணப்பட்டு முடிவுகளை வெளியிடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com