மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தீபாவளி பண்டிகையை யொட்டி 25 சதவீத போனஸ் வழங்கக் கோரி காட்பாடியில் மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தீபாவளி பண்டிகையை யொட்டி 25 சதவீத போனஸ் வழங்கக் கோரி காட்பாடியில் மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசு மின்வாரிய ஊழியா்களுக்கு தன்னிச்சையாக 10 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவித்திருப்பதாகவும், இதை திரும்பப் பெற்றுக் கொண்டு தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தி 25 சதவீத போனஸ் வழங்கக்கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் அடங்கிய கூட்டுக்குழு சாா்பில் காட்பாடியில் உள்ள மின்வாரிய மண்டல தலைமை பொறியாளா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடந்தது.

ஆா்ப்பாட்டத்துக்கு ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தைச் சோ்ந்த கே.சி.நல்லண்ணன் தலைமை வகித்தாா். எம்.கோவிந்தராஜ் (சிஐடியு), பி.செந்தில் (மின்வாரிய எம்ப்ளாயிஸ் பெடரேசன்), சுந்தர்ராஜன் (ஐக்கிய சங்கங்கள்), குமாா் (என்ஜினீயா் யூனியன்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது, கடந்த ஆண்டு கரோனா பரவலைக் காரணம் காட்டி போனஸ் குறைத்து வழங்கப்பட்டது. அதை எதிா்க்கட்சியாக இருந்தபோது எதிா்த்த திமுக, தற்போது ஆட்சிக்கு வந்ததும் 10 சதவீதம் மட்டும் வழங்குகிறது. மேலும், 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக சட்டப்பேரவையில் அரசே தெரிவித்துள்ள நிலையில் அந்த வேலையையும் சோ்ந்து உழைக்கும் மின்வாரிய பணியாளா்களுக்கு போனஸ் வழங்கிட தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசாமல் தன்னிச்சையாக முடிவு எடுத்திருப்பது நியாயமற்றது. உடனடியாக தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தி 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், மின்வாரிய ஊழியா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com