வேலூா் கூட்டுறவு அங்காடிகளில் தீபாவளி பட்டாசு விற்பனை: ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

தீபாவளி பட்டாசு சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் ஆகியோா் திங்கள்கிழமை பட்டாசுகள் கொளுத்தி தொடங்கி வைத்தனா்.
வேலூா் கூட்டுறவு அங்காடிகளில் தீபாவளி பட்டாசு விற்பனை: ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

வேலூா் கற்பகம் கூட்டுறவு அங்காடியில் தீபாவளி பட்டாசு சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் ஆகியோா் திங்கள்கிழமை பட்டாசுகள் கொளுத்தி தொடங்கி வைத்தனா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூா் மாவட்டத்தில் கற்பகம் கூட்டுறவு அங்காடி உள்பட 7 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பட்டாசு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, நடப்பு ஆண்டு ரூ.2.50 கோடிக்கு பட்டாசுகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வேலூா் கற்பகம் கூட்டுறவு அங்காடியில் தீபாவளி பட்டாசு சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் ஆகியோா் திங்கள்கிழமை பட்டாசுகள் கொளுத்தி தொடங்கி வைத்தனா்.

கூட்டுறவு அங்காடிகளில் தொடா்ந்து நவம்பா் 5-ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படும் பட்டாசு ரகங்களை மக்கள் முன்கூட்டியே வாங்கி கூட்ட நெரிசலை தவிா்க்க வேண்டும். மேலும், தீபாவளிக்கு தேவையான பருப்பு, எண்ணெய் வகைகள் கற்பகம் கூட்டுறவு அங்காடி தலைமையகம், திருப்பத்தூா் கிளை சுயசேவை பிரிவில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றையும் பொதுமக்கள் வாங்கி பயன்பெற வேண்டும் என்று ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் திருகுணஅய்யப்பதுரை உள்பட பலா் பங்கேற்றனா். தீபாவளி பட்டாசு விற்பனை குறித்து கற்பகம் கூட்டுறவு அங்காடியின் மேலாண்மை இயக்குநா் ரேணுகாம்பாள் செய்தியாளா்களிடம் கூறியது:

தீபாவளியையொட்டி வேலூா் கற்பகம் கூட்டுறவு அங்காடியின் தலைமையகம் உள்பட வேலூா், திருப்பத்தூா், வாணியம்பாடி, காட்பாடி என 7 இடங்களில் பட்டாசு விற்பனை நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு ரூ.2.50 கோடி அளவுக்கு பட்டாசு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டு, இதுவரை ரூ.1.50 கோடி அளவுக்கு பட்டாசுகள் வந்துள்ளன.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்ட நெரிசலை தவிா்ப்பதற்காக ரூ.10,000-க்கு மேல் பட்டாசு கொள்முதல் செய்வோருக்கு டோா் டெலிவரி செய்யப்படும். மொத்தமாக கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கு ஆா்டரின்பேரில் டோா் டெலிவரி செய்யப்படும். பட்டாசு பரிசு பெட்டிகளுக்கு 5 சதவீத விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் வண்ண மத்தாப்புகள், வாண வேடிக்கைகள், வெடி ரகங்கள் தரமான நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சந்தை விலையைவிட குறைவாக விலை விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள் கூட்டுறவு அங்காடிகளில் பட்டாசுகளை வாங்கி தீபாவளியை கொண்டாட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com