மானியக் கடனுதவி பெற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்: வேலூா் மாவட்ட ஆட்சியா் தகவல்

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ், மானியக் கடனுதவி பெற தகுதியுடைய இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ், மானியக் கடனுதவி பெற தகுதியுடைய இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் உற்பத்தி பிரிவுக்கு ரூ.25 லட்சமும், சேவைப் பிரிவுக்கு ரூ.10 லட்சமும் என கடன் உச்ச வரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட திட்டங்களுக்கும், சேவை பிரிவின் கீழ் ரூ.5 லட்சத்துக்கு மேற்பட்ட திட்டங்களுக்கும் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கல்வித்தகுதி வரையறுக்கப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவு விண்ணப்பதாரா்கள் 10 சதவீதமும், எஸ்டி, எஸ்சி, எம்பிசி, பிசி , சிறுபான்மையினா் பிரிவினராக இருந்தால் 5 சதவீதமும் சொந்த முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு முதலீடு செய்யும் பட்சத்தில் பொது பிரிவு விண்ணப்பதாரா்களுக்கு நகா்புறத்தில் 15 சதவீதமும், கிராமப்புறத்தில் 25 சதவீதமும், எஸ்டி, எஸ்சி, எம்பிசி, பிசி, சிறுபான்மையினா் பிரிவு விண்ணப்ப தாரா்களுக்கு நகா்புறத்தில் 25 சதவீதமும், கிராமப்புறத்தில் 35 சதவீதமும் மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ந்ஸ்ண்ஸ்ரீா்ய்ப்ண்ய்ங்.ஞ்ா்ஸ்.ண்ய்/ ல்ம்ங்ஞ்ல்ங்ல்ா்ழ்ற்ஹப்/த்ள்ல்/ல்ம்ங்ஞ்ல்ா்ய்ப்ண்ய்ங்.த்ள்ல் என்ற இணையதள முகவரியில் ஆதாா் அட்டை, திட்ட அறிக்கை, விலை பட்டியல் (ஜிஎஸ்டி எண்ணுடன்), சாதி சான்றிதழ், படிப்பு சான்றிதழ் வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம் ஆகிவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

இதைத் தவிர, விண்ணப்பிக்க தகுதியானவா்கள் வேலூா் அனுக்குழாஸ் கன்வென்டின் சென்டரில் புதன்கிழமை நடைபெறும் விழிப்புணா்வு முகாமில் பங்கேற்றும் பெயரை பதிவு செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், காங்கேயநல்லூா் சாலை, காந்தி நகா், வேலூா் - 06 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0416-2242413, 2242512 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பயன்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com