ஆசிரியா் வீட்டில் காா், தங்க நகை திருட்டு
By DIN | Published On : 01st September 2021 11:56 PM | Last Updated : 01st September 2021 11:56 PM | அ+அ அ- |

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பூட்டியிருந்த ஆசிரியா் வீட்டில் காா், தங்க நகைகள் திருடு போயின.
குடியாத்தத்தை அடுத்த காா்த்திகேயபுரத்தைச் சோ்ந்தவா் ஆசிரியா் சுதாகா் (41). இவா், செவ்வாய்க்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூா் சென்றாராம். புதன்கிழமை வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காா், ஒரு கலா் டிவி, பீரோவில் இருந்த ஒரு சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.புகாரின்பேரில் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். கைரேகை நிபுணா்களும் தடயங்களை சேகரித்தனா்.