கரோனா தடுப்பூசி குறித்து வீடுகள், கடைகள்தோறும் விழிப்புணா்வு

குடியாத்தம் நகரில், நகராட்சி அதிகாரிகள் வீடுகள், கடைகள்தோறும் சென்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
கரோனா தடுப்பூசி குறித்து வீடுகள், கடைகள்தோறும் விழிப்புணா்வு

குடியாத்தம் நகரில், நகராட்சி அதிகாரிகள் வீடுகள், கடைகள்தோறும் சென்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டத்தில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும், அதற்கான நடவடிக்கைகளில் அனைத்துத்துறை அதிகாரிகளும் ஈடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.குடியாத்தம் நகரில் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி, சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்.பள்ளி, ரோட்டரி சங்கம், விநாயகபுரம் கூட்டு சாலை ஆகிய 4 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்கள் இயங்கி வந்தன.தற்போது கூடுதலாக நகராட்சி அலுவலகம், வீரபத்திரி மேஸ்திரி தெரு, நடுப்பேட்டை, மவுசன்பேட்டையில் உள்ள மசூதிகள், சித்தூா்கேட்டில் ஷெரீப்நகா் உள்ளிட்ட 10 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.இந்நிலையில் சனிக்கிழமை குடியாத்தம் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) பி.சிசில்தாமஸ் தலைமையில், நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் குழுக்களாக வீடுகள், கடைகள்தோறும் சென்று தடுப்பூசி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.பழைய பேருந்து நிலைய பகுதியில் பி.சிசில்தாமஸ் தலைமையில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் பாண்டிசெந்தில்குமாா், களப்பணியாளா் பிரபுதாஸ், பென்னி உள்ளிட்டோா் கடைகள்தோறும் சென்று, தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினா்.தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்த சிலரது கடைகளைப் பூட்டினா்.கடை உரிமையாளா்கள், கடைகளில் வேலை செய்யும் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான கடிதத்தை வைத்திருக்க வேண்டும் என எச்சரித்தனா்.கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் 100 சதவீத இலக்கை அடைய வேண்டும் மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என சிசில்தாமஸ் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com